பட்ஜெட் 2022: தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Budget 2022: Cost 1.03 lakh crore roads in Tamil Nadu, Nirmala Sitharaman announces!

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று (31-01-2022) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை உரையுடன் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. முதல் நாளில் தமிழகத்திற்காக அறிவித்த திட்டங்கள் யாவை? தெரிந்துக்கொள்ளுங்கள்.

குடியரசுத் தவைரின் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடரில், கல்வி குறித்து பேசிய குடியரசுத் தவைவர்,

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக"

என்ற திருக்குறளின்படி, பெண்கள் கல்வி, பாதுகாப்பு போன்ற விஷயங்களில், இந்தியா கவனம் செலுத்திவருவதை குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, உரையை தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல திட்டங்களை அறிவித்தார். மேலும் அவர், "கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். விரைவில் 2 புதிய தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல்: கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! வரும் 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்க உள்ளன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம் செய்யப்படும் உள்ளன. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் சாலைகள், மதுரை-கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட உள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தில் ரூ. 27லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்தியாவின் வேளாண் பொருட்களை சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய திட்டங்கள் அறிமுகமாகும். இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக திகழும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார். 27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிமுகமாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்த அவர், மேலும் பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை’’என அவர் கூறினார்.

நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது, இன்று இரண்டாவது நாள் கூட்டத்தொடர் தொடங்கும், மேலும் இந்த ஆண்டின் டிஜிட்டல் பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் காண, பதிவிறக்கம் செய்யுங்கள் இந்த செயலியை, விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைய லிங்கில் உள்ளது.

மேலும் படிக்க:

2022 டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலை, டிஜிட்டல் மூலம் பார்க்க, செயலி அறிமுகம்

2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?

English Summary: Budget 2022: Cost 1.03 lakh crore roads in Tamil Nadu, Nirmala Sitharaman announces! Published on: 01 February 2022, 10:49 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.