தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம், எப்படி விண்ணப்பிப்பது?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Street vendors have to apply under this scheme to get Rs.10,000

தெரு வியாபாரிகள் நகர்ப்புற பொருளாதாரத்தின் மிக முக்கியமான பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர் மற்றும் நகரவாசிகளின் வீட்டு வாசலுக்கே சென்று மலிவு விலையில் பொருட்கள் மற்றும் மற்ற சேவைகளையும் வழங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நிதி உதவியுடன் அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா என்றால் என்ன?

ஆத்மநிர்பர் நிதி யோஜனா என்று அழைக்கப்படும் பிரதமரின் தெரு வியாபாரிகளுக்கான சுயசார்பு நிதித் திட்டம் ஜூன் 2020 இல் மைக்ரோ கிரெடிட் வசதியாக தொடங்கப்பட்டது. COVID-19 தொற்றுநோயின் விளைவாக ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க தெரு வியாபாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கமாகக் செயல்பட்டு வருகிறது. இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்வநிதி திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?

COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. எனவே, தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கும், செயல்பாட்டு மூலதனத்திற்கும் கடன் வழங்குவது அவசரத் தேவையாக உள்ளது. அதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

PM ஸ்வாநிதி யோஜனாவின் நோக்கங்கள்

  • பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தின் முதல் நோக்கம் ரூ.10,000 வரை செயல்பாட்டு மூலதனக் கடன் வசதியை வழங்குவதாகும்.

  • பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் இரண்டாவது நோக்கம் தெருவோர வியாபாரிகளிடையே தடைப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகும்.

  • அதன் மூன்றாவது நோக்கம், ஆண்டுக்கு 7% வட்டி மானியம் வழங்குவதன் மூலம் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிப்பதாகும்.

  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட பகுதிக்கு நிதி உதவி செய்வதாகும்.

PM ஸ்வாநிதி யோஜனாவிற்கான தகுதி

  • தெரு வியாபாரிகள் சட்டம், 2014ன் கீழ் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிவித்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பயனாளிகளுக்கு PM ஸ்வாநிதி திட்டம் கிடைக்கிறது.

  • இது தவிர, 24 மார்ச் 2020 அன்று அல்லது அதற்கு முன் நகர்ப்புறங்களில் செயல்பட்ட தெருவோர வியாபாரிகள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.

  • இது தவிர, விற்பனைச் சான்றிதழ் / அடையாள அட்டை இருக்க வேண்டும்.

PM ஸ்வாநிதி யோஜனாவின் பலன்கள்

  • PM ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மாதம் ரூ. 100 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

  • கடன் வாங்கிய பிறகு தாமதம் செய்தால் அபராதம் இல்லை.

  • விற்பனையாளர்கள், வியாபாரிகள், காய்கறிகள், பழங்கள், தெரு உணவுகள், தேநீர், முட்டை, ஆடைகள், காலணிகள் மற்றும் கைவினைப் பொருட்கள், முடிதிருத்தும் கடைகள், செருப்புக் கடைக்காரர்கள், எழுதுபொருள் விற்பனையாளர்கள் போன்ற பலர் அடங்குவர்.

PM ஸ்வாநிதி யோஜனாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

நீங்கள் PM ஸ்வநிதி திட்டத்திற்குத் தகுதிபெற்று, அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான pmsvanidhi.mohua.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி, இந்த திட்டம் என்ன தெரியுமா?

PMMSY: மீன் வளர்ப்புக்கு ரூ. 3 லட்சம் வரை மானிய கடன் பெற வாய்ப்பு!

English Summary: Street vendors have to apply under this scheme to get Rs.10,000 Published on: 09 February 2022, 07:34 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.