1. செய்திகள்

ஓரே கிளிக் மூலம் 9 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000 : 25ம் தேதி விடுவிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit Sarkaritodaynews

விவசாயிகள் ஆவளுடன் எதிர்பார்க்கும் பி.எம் கிசான் திட்டத்தின் 7-வது தவணை வரும் 25ம் தேதி விடுவிக்கப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக வெளியிடுவார் என மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் கிசான் திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samman Nidhi) அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சயின் போது ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்றும் பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்!!

இயற்கை விவசாயியாக உருவெடுக்கும் எம்.எஸ்.தோனி! - பழ சாகுபடியை தொடங்குகிறார்!!

பிரதமர் கிசான் திட்டம் 

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

பொங்கல் பரிசுடன் கரும்பு! கொள்முதல் செய்ய விவசாயிகளைத் தேடும் பணியில் அரசு!

English Summary: PM to release next instalment under PM-KISAN on 25 December through video conference

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.