வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெற இதை செய்யுங்கள்- விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
provides subsidy for agricultural machinery and tools in virudhunagar district

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

வேளாண் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் பணிகளில் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கவும் குறித்த காலத்தில் வேளாண் பணிகளை செய்திடவும் வேளாண் பணிகளில் பல்வேறு நவீன வேளாண் கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வேளாண்மை பொறியியில் துறை மூலம் தேவையுள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானியம் பெற இவ்வாறான இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு இ-வாடகை ஆன்லைன் செயலி மூலம் பதிவு செய்யும் போதே சிறு குறு விவசாயிகள், இ-வாடகையில், "மானியம் தேவைஎன பதிவு செய்து அதற்கான ஆவணங்களை பதிய வேண்டும். சிறு குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.250/- வீதம் 5 ஏக்கருக்கு ரூ.1250/- வரை, அதாவது வாடகை தொகையில் 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

நடப்பு ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 1624 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியமாக வழங்க ரூ.4.06 இலட்சம் (பொது பிரிவினருக்கு ரூ.3.30 இலட்சம் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு ரூ.0.76 லட்சம்) ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய விவரம்:

உதவி செயற்பொறியாளர்(வே.பொ), மின்சார துணை மின்நிலையம் அருகில், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் அலுவலகம்

சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய விவரம்:

உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வி.பி. எம். எம் கல்லூரி எதிரில், கிருஷ்ணன்கோவில் அலுவலகம்.

மேலும், விபரங்களுக்கு ஜே.சாந்தி சகாயசீலி, உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) (பொ), விருதுநகர் அவர்களை அலைபேசி எண்: 9080230845 மற்றும் உதவிப் பொறியாளர்(வே.பொ), ந.முத்தையா, விருதுநகர் அவர்களை அலைபேசி எண்:7708862493-யிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆர்.வைத்தியநாதன், உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) (பொ), திருவில்லிபுத்தூர் அவர்களை தொலைபேசி எண்: 9442262017- யிலும், உதவிப் பொறியாளர் (வே.பொ), சி.விஜயலட்சுமி, திருவில்லிபுத்தூர் அவர்களை அலைபேசி எண்:8144242899 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டம்- தன்னார்வலர்களை நியமிப்பதில் கடும் கட்டுப்பாடு

English Summary: provides subsidy for agricultural machinery and tools in virudhunagar district Published on: 12 July 2023, 10:25 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.