முந்திரி, தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு திட்டங்கள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Subsidy for purchase of cashew cutting machine in ariyalur district

இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம் இடுபொருட்கள் வழங்குதல், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத்திற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 6364 எண்கள் / எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.448.00 இலட்சம் பெறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் காய்கறி குழிதட்டு நாற்றுகள், சமமங்கி சாகுபடி, மா, பலா, கொய்யா, பப்பாளி, எலுமிச்சை, பழக்கன்றுகள், முந்திரி ஒட்டுச்செடிகள் மற்றும் முந்திரி பழைய தோட்டம் புதுப்பித்தல் போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக் குடில், நிலப்போர்வை, போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல்:

இயற்கை விவசாயிகளுக்கு அங்ககப் பண்ணையம் இடுபொருட்கள் வழங்குதல் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைத்தல் போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன. தேனீப்பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வயலில் விளையும் விளைபொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50% மானியத்தில் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.

வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50% மானியத்தில் பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

காய்கறி மற்றும் மலர்களை இருப்பு வைத்து விநியோகிக்க 100 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன அறை மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி விற்பனை வண்டி 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தில் முந்திரி விவசாயிகளுக்கு முந்திரி வெட்டும் இயந்திரம், முந்திரி பிரிப்பான் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தேவைப்படும் ஆவணங்கள் என்ன?

நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அலுவலகம் செல்ல இயலாத விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலா? ஆர்.என்.சிங் கொடுத்த தகவல்

English Summary: Subsidy for purchase of cashew cutting machine in ariyalur district Published on: 09 July 2023, 05:18 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.