Krishi Jagran Tamil
Menu Close Menu

மன அழுத்தம் மற்றும் மன கவலையை போக்க 6 சிறந்த குறிப்புகள்

Friday, 12 April 2019 12:35 PM

நீங்கள் என்றைக்காவது பதட்டம், கிளர்ச்சி, வேகமான இதயத்துடிப்பு, மார்பு வலி, ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளீர்களா? ஆம் என்றல் நீங்கள் மன அழுத்தம் மற்றும்  பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்ப்டுளீர்கள். மேலும் பதட்டம் மனிதர்கள் எதிர்கொள்ளும் சாதாரண பிரச்சனையாகும்.

அதீத பதட்டம் என்ன?

சோர்வு, பயம், பாதுகாப்பின்மை,  போன்றவை உணர்ந்தாள் அதீத பதட்டம் ஏற்படும். உண்மையில் இது பயப்பட கூட விஷயம் இல்லை. ஆபத்து நீங்கி விட்ட பிறகும் பயம் இருக்கும் ஆனால் பதட்டம் பயம் இல்லாமலும் ஏற்படும். ஆனால் பயம்-தூண்டுதல் சூழ்நிலை நீண்ட காலமாக இருந்தால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது தொடர்ந்து வரும் போது மருத்துவ பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது, சாதாரண தினசரி நடவடிக்கைகள் அல்லது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

இதன் காரணங்கள்

பதட்டம் சாதாரண காரணத்தில் ஏற்பட்டு பெரிய அளவிலான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது கடுமையான அல்லது வலிமையற்ற சூழலை உருவாக்குகிறது. மது, போதை, அதிக தேநீர் பருகுதல், அதிக மருந்துகள் உட்கொள்ளல் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. மேலும் இது மன அழுத்தம் மற்றும் மன நோய்க்கான அறிகுறியா கருதப்படுகிறது.

அறிகுறிகள்

காரணம் இல்லாமல் வியர்வை ஏற்படுதல்,  மூச்சு கோளாறு, போன்றவை மற்றும்  நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உலர் வாய், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை இருக்கலாம். பதற்றம், ஓய்வெடுக்க இயலாமை, எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், தூக்கமின்மை அல்லது பாலியல் சிக்கல்கள் ஆகியவையும் நடைபெறலாம்.

பதட்டம் மற்றும் மன  அழுத்தத்தை குறைக்க சில இயற்க்கை வழிகள்

1. உடற்பயிற்சி:

உடற்பயிற்சி ஆற்றலை எரிப்பதற்கான சிறந்த வழியாகும். இறுக்கமான சூழ்நிலைகளால் ஏற்படும் கவலைக்கு இது உதவும். வழக்கமான உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் ரீதியான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு வலிமை அளிக்கும்.

2. புகைபிடிப்பதை தவிர்க்கவும்:

மன அழுத்தத்தின் போது புகை பிடிப்பது வேகமா வலிப்பு உண்டாவது போல் மற்றும் அடிமையாக்கி நோயாய் மாறுகிறது. நிக்கோட்டின் மற்றும் மற்ற ரசாயன சிகரெட் போன்றவை மூளை பாதிப்பிற்கு அறிகுறியாகும்.

3. தியானம்:

மன அழுத்தத்தை ,மன குழப்பத்தை குறைத்து மன சாந்தி மற்றும் பொறுமை பெறுவதற்கு சிறந்த பயிற்சியாகும். நிதானம் மற்றும் பொறுமையான சூழலை ஏற்படுத்தும்.இதனால் மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும்.

4. ஆரோகியமான உணவு:

 பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. மற்றும் மன வலிமையை எதிர் கொள்ளும் சக்தி கிடைக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

5. மூலிகை தேநீர்

சில மூலிகை தேநீர் பதட்டத்தையும் தூக்கமின்மையும் போக்குவதற்கு உதவுகிறது. மேலும் மக்கள் இதனை பருகுவத பழக்கப்படுத்தி கொள்வார்கள். ஆனால் சில தேநீர் பழக்கத்தால் மூளை பாதிப்படைகிறது. பால் சேர்த்த தேநீரை தவிர்ப்பது நல்லதாகும்.

6. நல்ல முழுமையான தூக்கம்

தூக்கமின்மையும் ஒரு அறிகுறியாக கருதப்படுகிறது. புத்தகம் படிப்பது, தொலை பேசி பயன் படுத்துவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையை இரவில் கண்டிப்பாக தடுக்க வேண்டும். தூக்க வரவில்லை என்றல் எழுதும் பழக்கம் முயற்சிப்பது சிறந்த பலனை தரும். பால் சேர்த்த தேநீரை தவிர்ப்பது நல்லதாகும். நன்றாக தூங்கி விழிப்பதால் உடல் அலுப்பு குறைந்து சுறுசுறுப்பு உண்டாகிறது. மனம் மற்றும் மூளை தெளிவாக வேலை செய்வதற்கு உதவும்.

 

K. Sakthipriya
Krishi Jagran

meditation, healthy foods, proper sleep, avoid smoking, reason for stress, exercise
English Summary: 6 best tips to cure anxiety and stress

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. நூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு!
  2. தமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்... பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல! - ககன்தீப் சிங் பேடி!!
  3. ரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ!!
  4. உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!
  5. தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதலா...? கிருஷ்ணகிரி, கோவையில் பரபரப்பு தேடுதல் வேட்டை!
  6. 3112 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!
  7. வெட்டுக்கிளி வருகிறதா..? கர்நாடகாவில் உஷார் நிலை - அச்சத்தில் தென்னிந்திய மாநிலங்கள்?
  8. புதுச்சேரி வேளாண் விற்பனை மையத்திற்கு குறைந்தது நெல் வரத்து - நிலக்கடலை வரத்து அதிகரிப்பு!
  9. மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்! - இரு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாசனம் செய்ய வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தல்!
  10. தமிழகத்தில் இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த கன மழை : மக்கள் மகிழ்ச்சி!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.