1. வாழ்வும் நலமும்

ஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்

KJ Staff
KJ Staff

மாறிவரும் சூழலில் இன்றைய இளம் பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அத்துணை ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்ககள் பயன் படுத்துகின்ற பொருட்கள் சரும ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் பாதிக்கின்றன. இந்த பொய்யான அழகிற்கு பின்னால் உள்ள பிரச்சனைகள் அவர்களே ஏற்படுத்தி கொள்கின்றனர்.

இதில் முக்கியமான அழகு சாதன பொருளாக  இருப்பது  லிப்ஸ்டிக் (LIPSTICK) என்கின்ற உதட்டுச்சாயம். இதை தடவுவதால் கூடுதல் அழகும் ,பொலிவும் கிடைப்பதாக நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்று அறியும் நாள் வந்து விட்டது. அழகாய் காட்டும் இந்த லிப்ஸ்டிக்கில் உள்ள ஆபத்தை பற்றி அமெரிக்காவில் நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.

குட் மார்னிங் அமெரிக்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது

அமெரிக்காவில் வெளியிடப்படும் "குட் மார்னிங்" பத்திரிகை நடத்திய ஆராய்ச்சியில் சிறந்த லிப்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 22 லிப்ஸ்டிக்க்கை கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இதில் 55% சதவீதம் விஷத் தன்மை நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதில் இருந்து 12 லிப்ஸ்டிக்கில் ஈயம் கலந்திருப்பது கண்டறிய பட்டுள்ளது (Boston Lead Poison Prevention Program) லெட் பாய்சன் ப்ரீவென்சன் ப்ரோக்ராமின் டாக்டர். ஷான் பால்பிரே அவர்கள் பெண்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பாக இந்த ஈயம் கலந்த லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதால் உடலில் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்றார்.

டாக்டர். ஷான் பால்பிரே அவர்கள் ஆலோசனை படி ஈயம் சருமத்தில் கலந்தால் முதலில் மூளையை பாதிக்கும் பின்பு சிறிது சிறிதாக மனதளவில் எரிச்சல் மற்றும் நியாபகத்திறனை குறைத்து  விடும் என்றார்.

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: america good morning press approved : lipsticks affects women mentally Published on: 15 June 2019, 04:42 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.