1. வாழ்வும் நலமும்

இயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்

KJ Staff
KJ Staff

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நோய்க்கும் மருந்து ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் தான் நம் அறியாமையினால் உணர்ந்து கொள்ள தவறுகிறோம். நாம் உட்கொள்ளும் பெரும்பாலான கனிகளின் இலைகள் உண்ண தகுந்தவையாக, பிண தீர்க்கும் மருந்தாக உள்ளது. 

கொய்யா இலையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான  புரதச்சத்து , வைட்டமின் C, B6, கோலைன், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு போன்ற தன்மைகளையும் உள்ளடக்கியது.

கொய்யா இலையில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள்

 • நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல்கள் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கலாம். கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மெல்வதும் கூட நன்மை பயக்கும்.
 • கொய்யா இலையினை நிழலில் உலர்த்தி வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல பருகலாம், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
 • உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொய்யா இலை தேனீரை பருகலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
 • கொய்யா இலையை கஷாயம் போல செய்து தொடர்ந்து குடித்து வந்தால், அதிகப்படியான உதிரப்போக்கு மட்டுப்படும், அத்துடன்  தைராய்டு சுரப்பு சமநிலைக்கு திரும்பும்.
 • மலட்டு தன்மையினை கட்டு படுத்துகிறது. விந்தணுவினை உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.  இதயம் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.
 • பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
 • கொய்யா இலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலை சுத்தம் செய்வதுடன், புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கிறது.
 • மழைக்காலங்களில் கொய்யா இலை தேநீர் அருந்துவதால், ஏற்படும் இருமல், மார்பு சளி போன்றவற்றிற்கு தீர்வாகும்.
 • கொய்யா இலை சாறில் அமிலேஸ்(Amylase) என்னும் நொதியினை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இருபதால் பல் வலி,  ஈறுகளில் உண்டாகும்  பிரச்னைகள்  குணப்படுத்துகிறது.
 • வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்தி சுவாச கோளாறு மூக்கு அழற்சி போன்றவற்றிற்கு கொய்யா இலை தேநீர் உதவுகிறது.
 • செரிமான பிரச்னைகளால் அவதி படுபவர்கள் கொய்யா இலையின் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமானம் ஒழுங்காக நடை பெறுவதற்கு உதவுகிறது.
 • நீரழிவு நோயினால் அவதி படுபவர்கள் கொய்யா இலையின் நீரை பருகும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டு படுத்திக்கிறது.
 • பல விதமான தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது . முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றிற்கு கொய்யா இலை நீர் தீர்வாகும்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Medicinal Health Benefits Of Guava Leaves: Can Loss Weight Without Any Workout

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.