1. வாழ்வும் நலமும்

இளமையில் மாதம் ரூ.210 செலுத்தி முதுமையில் ரூ.5000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்! இப்போதே ஆரம்பித்திடுங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு எல்லோருக்குமாக மாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தனியாரிடம் பணியாற்றி வரும் மக்களும், சுய தொழில் செய்துவரும் மக்களும் தம் ஊதியத்தை சேமிக்கவும், அவர் தம் முதுமைக் காலத்தில் அவர்களது சேமிப்பிற்கு ஏற்ப நிலையான ஓய்வூதியத்தை வழங்கும் நோக்கத்துடன் ''அடல் பென்சன் திட்டத்தை'' மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அடல் ஓய்வூதிய திட்டம்

அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana) அல்லது APY ஜூன் 2015 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.

APY திட்டம் - தகுதி மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது?

 • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

 • வயது வரம்பு 18-40 வயதுக்குள் இருக்க வேண்டும்

 • ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும்

 • வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்களுடன், அருகில் உள்ள வங்கி / தபால் நிலையத்தை அணுகி சேமிப்பு கணக்கு மற்றும் APY பதிவு படிவத்தை நிரப்பவும். தேசிய ஓய்வூதியத் திட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் இத்திட்டத்தில் இணையலாம். ஆன்லைன் பதிவுக்கு எந்த ஆவணத்தையும் அச்சுப் பிரதியாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

மாதாந்திர பங்களிப்புத் தொகை

 • 18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.

 • ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.

 • ரூ.210 செலுத்தி வந்திருந்தால் 60 வயதுக்குப் பின் 5000 ரூபாய் கிடைக்கும்.

பணம் செலுத்த தவறினால் அபராதம்

மாதம் தோறும் தாங்களே பணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும்.

ரூ.1 முதல் ரூ.100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும்,
ரூ.101 முதல் ரூ.500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும்,
ரூ.501 முதல் ரூ.1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும்,
ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதுடன், அடல்ட் பென்ஷன் திட்டலிருந்து கணக்கு நீக்கப்படும்.

நிபந்தனைகள்

குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இத்திட்டத்தில் இருக்க வேண்டும். எனவேதான் 40 வயதுக்கு மேல் இத்திட்டத்தில் இணைய முடியாது. எந்தெந்த வயதில் அடல்ட் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், 60 வயதுக்குப் பின் கிடைக்கும் பென்ஷன் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பின்வரும் அட்டவணையில் காணலாம்.

மாதாந்திர பங்களிப்பு தொகை மாற்றுவது எப்படி?

ஓய்வூதிய தொகை மற்றும் மாதாந்திர பங்களிப்பு தொகையை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஏப்ரல் மாதம் மாற்றிக்கொள்ளலாம்.
அதாவது, 18 வயதில் ரூ.84 செலுத்தி 60 வயதுக்குப் பின் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடிவு செய்திருந்த ஒருவர், ஏதேனும் ஒரு வயதில் ஏப்ரல் மாதம் வரும்போது மாதாந்திர பங்களிப்புத் தொகையை கூட்டவோ குறைக்கவோ செய்ய முடியும். அதற்கேற்ப, 60 வயதுக்குப் பின் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் மாறும்.

வரி விலக்கு உண்டு

 • அடல்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இணையான வரிச்சலுகை உண்டு.

 • வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80சிசிடி 1பி (Section 80CCD 1B) மூலம் ரூ.50,000 வரை வரிச்சலுகையைப் பெறலாம்.

 • பிரிவு 80சி (Section 80C) மூலம் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையுடன் கூடுதலாக இந்த வரிச் சலுகை கிடைக்கும்.

திட்டத்திலிருந்து விலகுவது எப்படி?

 • இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே அடல்ட் திட்டத்திலிருந்துவிலக முடியும்.

 • திட்டத்தில் இணைந்தவர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணை வாழும் காலம் வரை அவரது ஓய்வூதியம் கிடைத்துவரும்.

 • வாழ்க்கைத்துணையும் இறந்த பின், உறுதி அளிக்கப்பட்ட மொத்த தொகையில், எஞ்சிய தொகை திட்டத்தில் சேர்ந்தவரின் வாரிசுதாரருக்கு மொத்தமாக வழங்கப்படும்.

 • திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்கு முன்பே இறந்து, அவரது வாழ்க்கைத் துணை மீதி காலத்திற்கு மாதாந்திர பங்களிப்புத் தொகையை செலுத்திவந்திருந்தாலும் இது பொருந்தும்.

 • அடல் திட்டத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு 1800-110-069 என்ற இலவச உதவி எண்ணை அழைக்கலாம்.

மேலும் படிக்க...

பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!

குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்!


English Summary: Atal Pension Yojana is a Social Security Scheme introduced by Govt. of India, aimed at providing a steady stream of income after the age of 60 to all citizens of India Published on: 25 August 2020, 06:52 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.