1. வாழ்வும் நலமும்

Breakfast Recipe: அசத்தலான இன்ஸ்டன்ட் ராகி தோசை

Deiva Bindhiya
Deiva Bindhiya
Ragi Dosa
Breakfast Recipe: Amazing Instant Ragi Dosa

நமது பரம்பாரிய உணவுகளில் முக்கியமானவை, தினைகள் ஆகும். இதனை நினைவுக் கூறும் வகையில், வருகிற 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கொண்டாட உள்ளோம். எனவே இதன், ஒரு முயற்சியாக ராகியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்க உள்ளோம்.

ராகி அல்லது கேழ்வரகு தானியங்கள் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இந்த கேழ்வரகில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதில், நார்ச்சத்துகள், கால்சியம், விட்டமின் டி, அமினோ அமிலங்கள் போன்றவைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட்டு எடையைக் குறைக்க முடியும். கால்சியம் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு, இதை ஒரு முக்கிய உணவாகவே கொடுத்து வரலாம். அவர்களின் எலும்பின் வளர்ச்சிக்கும், வலுமைக்கும் உறுதுணையாக இருக்கும். பொதுவாக இந்த ராகியில் ராகி கஞ்சி, கேழ்வரகு தட்டை, கேழ்வரகு புட்டு செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இதில் தோசை சுட்டு சாப்பிடுவது மிகுந்த சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி ராகி தோசையை சாப்பிடுவார்கள். இதை உடனடியாக செய்ய முடியும் என்பதால் உங்களுக்கு வேலையும் எளிதாகும். இந்த ராகி தோசையை எப்படி வித்தியாசமாக செய்யலாம் என்பதை நாம் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தேவையான அளவு ராகி மாவு
  • நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 2 நறுக்கிய வெங்காயம்
  • 5 நறுக்கிய கறிவேப்பிலை
  • 3 நறுக்கிய பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு நீர்

செய்முறை:

  • ஒரு பாத்திரம் எடுத்து அதில் ராகி மாவை எடுத்து அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். மாவு, தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.
  • அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கட்டியில்லாமல் கிளறிக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
  • அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்துங்கள். இப்பொழுது மாவை ஊற்றி தோசை வார்த்துக் கொள்ளுங்கள். நைஸாக ஊற்ற வேண்டாம். கல்லில் ஒட்டிக் கொள்ளும். கொஞ்சம் தடிமன ஆக ஊற்றி தோசை சுடுங்கள்.

நெய்யை மேலே ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுங்கள். 3-4 நிமிடங்கள் வேக நேரம் ஆகும். அப்படியே சுடச்சுட சுட்ட தோசையை ஒரு தட்டில் வைத்து சட்னியுடன் தொட்டு சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும். ஆரோக்கியமான உணவும் கூட.

மேலும் படிக்க:

TNAU: பழங்கள் மற்றும் காய்கறிகளின் வணிகரீதியான உற்பத்தி குறித்து பயிற்சி

கொப்பரை தேங்காய்க்கு 2023 MSP| கரும்பு விவசாயிகள் போராட்டம்| Irrigation Farming

English Summary: Breakfast Recipe: Amazing Instant Ragi Dosa Published on: 02 January 2023, 05:27 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.