1. வாழ்வும் நலமும்

அகத்திக் கீரையுடன் பசுநெய் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

R. Balakrishnan
R. Balakrishnan
Benefits of Agathi Keerai

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகளுக்கு தனியிடம் உண்டு. அதிலும், அகத்திக்கீரையில் பல நற்பயன்கள் கொட்டிக் கிடக்கிறது. அகத்தை சுத்தப்படுத்துவதனால் அகத்தி கீரை என்று கூறுகின்றனர். ஆம், வாய் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உள்ளது. அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய் மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலன்களைத் தரும்.

அகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள்

அகத்திக் கீரையில் நீர் 73%, புரதம் 8.4%, கொழுப்பு 1.4%, தாதுப்புக்கள் 2.1%, நார்ச்சத்து 2.2%, மாவுச்சத்து 11.8% போன்ற சத்துக்கள் அகத்திக் கீரையில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அகத்திக் கீரையில் நிரம்பியுள்ள புரதச்சத்து மிகச் சிறந்த புரதமாக கருதப்படுகிறது. இக்கீரையில் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். அகத்திக் கீரையில், உயிர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின் ஏ 100கி மற்றும் 9000 கலோரிகள் உள்ளது.

மருந்து சாப்பிடும் காலத்தில் அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது. அகத்திக் கீரை வாதத்தையும் சரிசெய்கிறது. இது அதிகப்படியான மலமிலக்கியாகும். வயிற்றில் இருக்கும் கெட்ட புழுக்களை கொல்கிறது. இதுதவிர, பித்தத்தை சமன் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்

அகத்திக் கீரையில் உள்ள இலை, பூ, காய், பட்டை மற்றும் வேர் என அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்திக் கீரை காய்ச்சலை குறைத்து, உடல்சூட்டைத் தணித்து சமநிலைப்படுத்த உதவுகிறது. அகத்திக்கீரையை உண்பதால் குடல்புண், அரிப்பு மற்றும் சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும். அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று, சாற்றை விழுங்கினால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி நீங்கும். இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும். அகத்திக் கீரை கோழி மற்றும் மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது. அகத்திக் கீரையில் இருந்து தைலம் தயார் செய்யப்படுகிறது.

இதய ஆரோக்கியம் காக்கும்

அகத்திக் கீரையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. அகத்தி கீரையில் 16.22% வைட்டமின் சி உள்ளது. இது இரத்த குழாய்கள் தடிமனாவதை தடுக்கிறது. மேலும், கொழுப்புகளை கரைக்கிறது; இரத்த சோகையை நீக்குகிறது. பொலிவிழந்த தோலிற்கும், கருவளையங்கள் நிறைந்த முகத்திற்கும் அகத்திக்கீரை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் 1 மணிநேரம் வைத்திருந்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து விடும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கிறது. அகத்திக் கீரையை அரைத்து ஆறாத புண்கள் மீது தடவினால், விரைவில் ஆறிவிடும். அகத்தி இலைச்சாற்றை எடுத்து, அதனுடன் அதே அளவு தேன் கலந்து உண்டால் வயிற்று வலி நீங்கும். அகத்திக் கீரையுடன் சம அளவில் தேங்காய் சேர்த்து, அதனை அரைத்துச் சாறு எடுத்து, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையை கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடங்களில் பற்றுப்போட்டால் முழுவதுமாக குணமடையும்.

மேலும் படிக்க

மூட்டு வலி பிரச்சனையைத் தீர்க்க இந்த தோசை தான் பெஸ்ட்!

உங்களுக்கு வாய்வுத் தொல்லையா? அப்போ இதைப் பன்னாதிங்க!

English Summary: Can you get so many benefits if you eat ghee mixed with Agathi Keerai? Published on: 25 October 2022, 01:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.