Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கை தந்துள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல்

Tuesday, 03 September 2019 03:26 PM
arugampul

அருகம் புல் என்றாலே நினைவிற்கு வருவது விநாயகர். பசுமையான மெல்லிய நீண்ட கூர்மையான இலைகள். ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என தென்படும் இடங்களில் வளர்ந்து காணப்படும் இந்த அருகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அளிக்க வல்லது. 

arugampul juice

மருத்துவ பயன்கள்

* அருகம் புல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றும். 

* உடல் எடை (கொலஸ்ட்ரால்), சளித் தொல்லை, ஜலதோஷம், இரும்பல், நீர்க்கோவை (உடல் வீக்கம்), வயிற்று வலி, கண்பார்வை கூர்மை, வயிற்றுப்போக்கு  அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும்.

* ரத்த சோகை, மூக்கில் ரத்த கசிவு, மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, ரத்த புற்றுநோய் ஆகிய அனைத்து நோய்களும் குணமாகும்.

* சிறுநீர் பையில் உள்ள கல் நீங்க, நரம்பு தளர்ச்சி நீங்க, இதைய கோளாறு குணமாக, தோல் வியாதிகள் குணமாக அருகம் புல் சிறந்த மருந்து.  

பயன் படுத்தும் முறை

arugampul juice

* அருகம் புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள நஞ்சுகள் நீங்கும், ரத்தம் சுத்தமாகும், உடல் வீக்கம் குறையும், சிறுநீர் நன்றாக கழியும்.

* அருகம் புல்லை ஒரு கைப்பிடி அளவு அரைத்து காய வைக்காத 200 மில்லி ஆட்டுப்பாலில் கலந்து தினமும் காலையில் மட்டும் குடித்து வர ரத்த மூலம், நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* கொதிக்க வைத்த நீரில் ஒரு துளசி இலையுடன் அருகம் புல்லை சிறிதளவு போட்டு மூடி வைத்து பின் அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வர சீதள மற்றும் சளித்தொல்லை நீங்கும்.

* எலும்பிச்சை பழ அளவு அருகம் புல் பசையை பசுந்தயிரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

* அருகம் புல்லை சிறிதளவு எடுத்து தலையில் வைத்து கட்டிக் கொண்டால்  கபால சூடு தணியும்.

* உடல் அரிப்பு குணமாக அருகம் புல்லுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் நன்கு தடவிட வேண்டும். பின் நன்கு காய்ந்த பிறகு குளிக்க வேண்டும்.

* மனசோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றிற்கு அருகம் புல் சாறு சிறந்த மருந்து.

* படை, சிரங்கு, ஆறாத ரணங்கள், வறட்டுத்தோல் போன்ற பிரச்சனைகளை நீக்க சம அளவு அருகம் புல் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்  சேர்த்து தேய்த்து வர வேண்டும்.

* வயிற்றுப் புண் குணமாக 20 மி.லி அருகம் புல் சாறு, 20 மி.லி தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஒரு மாதம் தொடர்ந்து காலை வேளையில் சாப்பிட்டு வர விரைவில் தீர்வு உண்டாகும்.       

K.Sakthipriya
Krishi Jagran 

Cynodon Dactylon Scutch grass Arugampul species dhoop fertile soil loamy soil weight loss increase hemoglobin clean blood

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  2. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  3. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  4. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
  5. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
  6. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
  7. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?
  8. விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு
  9. அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்
  10. இயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.