1. வாழ்வும் நலமும்

கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும் சீரகம் -ஓமம் தேநீர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dissolve fat and stimulate weight loss Cumin -Omam tea!

Credit : Samayam Tamil

கொரோனாக் காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலைசெய்ததாலும், கணக்கில்லாமல் நொருக்குத்தீனிகளைச் சாப்பிட்டதாலும் ஏற்பட்ட உடல் பருமனால் அவதிப்படுபவரா நீங்கள்?

தொடரும் பிரச்னை (Continuing problem)

உங்களுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு இந்த தேநீர் மிகவும் சிறந்த பானம்.

அசிடிட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உடனடியாக இந்தப் பாரம்பரிய மருத்துவ முறையை எடுத்துக்கொள்ளலாம்.

எதனால் ஏற்படுகிறது (Which causes)

வயிற்றில் அசிடிட்டி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உடலுக்கு சேராத உணவை உட்கொள்வதும், கனமான உணவை சாப்பிட்டவுடன் படுத்துக்கொள்வதுதான்.

இயற்கை மருத்துவம் (Natural Medicine)

இந்த அசவுகரியமான சூழ்நிலையிலிருந்து நிவாரணம் பெற, பெரும்பாலான மக்கள் ஆங்கில மருத்துவத்தை நாடிச்செல்வார்கள். ஆனால், இந்த பிரச்னையிலிருந்து நிவாரணம் பெற ஒரு இயற்கையான மருத்துவம்தான் சீரகம் மற்றும் ஓமம் தேநீர்.

இந்த 2 இயற்கை பொருட்களை வைத்து ஆரோக்கியமான நிவாரணத்தை தயார் செய்யலாம். இந்த இரண்டு பொருட்களும், அசிடிட்டி மலச்சிக்கலின் மூல காரணத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பானம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்( Ingredients)

  • ஒரு டம்ளர்  தண்ணீர்

  • சீரகம் (ஜீரா) 2 தேக்கரண்டி

  • ஓமம் விதைகள் (அஜ்வைன்) 1 தேக்கரண்டி

செய்முறை (Preparation)

சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும். மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்துப் பருகலாம்.

எப்படி வேலை செய்கிறது? (How does it work?)


பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள ஓமம் விதைகள், நீண்ட காலமாக மருந்துகளைத் தயாரிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஓமம் தண்ணீர், வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது.

கெட்டக் கொழுப்பைக் குறைக்க (To reduce bad cholesterol)

சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுவதுடன், வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

சீரகத் தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க...

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

English Summary: Dissolve fat and stimulate weight loss Cumin -Omam tea!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.