1. வாழ்வும் நலமும்

நாய், பூனை வளர்க்கக் கட்டணம்- செல்லப்பிராணிப் பிரியர்களே உஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dog and cat breeding fees - Beware of pet lovers!
Credit : BBC

அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தச் செல்லப்பிராணிகள் வளர்ப்பு, அதிகளவில் மேற்கொள்ளப்படுவதால், நாய், பூனை வளர்க்கக் கட்டணம் வசூலிப்பது என இந்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மகிழ்ச்சி அளிக்கும் (Delightful)

எங்கேயோ ஒருவர் தனது வீட்டில், நாய், பூனை வளர்த்த நிலை மாறி, தற்போது பெரும்பாலானோர், செல்லப்பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை எப்போதுமே துருதுருப்பாக இருந்து நமக்கு உத்வேகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. இதனால் செல்லப்பிராணிகள் பல குடும்பங்களில் அவற்றின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன.

கட்டணம் வசூலிக்க

இதையடுத்து செல்லப்பிராணிகளை வளர்ப்போரிடம் கட்டணம் வசூலிக்க, கேரள மாநிலம் முன்வந்துள்ளது.கேரளாவில் அதிக அளவில் கால்நடைகள் மற்றும் நாய், பூனை வகைகள் குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.


நீதிமன்றம் உத்தரவு (Court order)

இதையடுத்து பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கவும், செல்ல பிராணிகளை அழைத்து செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி, கொச்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், கேரளாவில் உள்ள அனைத்து செல்ல பிராணிகளையும், கால்நடைகளையும் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுத்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதுமட்டுமல்லாமல், செல்ல பிராணிகளை வளர்ப்போர் அதற்கானக் கட்டணத்தைச் செலுத்தி லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது.

ரூ.500 கட்டணம் (Rs.500 fee)

இதையடுத்து கோழிக்கோடு மாநகராட்சி நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த முதற்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கோழிக்கோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நாய் வளர்ப்போர் ரூ.500 கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெற வேண்டும் என கூறியுள்ளது.

இதுபோல பூனை வளர்க்க அதன் உரிமையாளர் ரூ.100 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோழிக்கோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளை எளிதில் கணக்கிட முடியும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.


நடவடிக்கை (Action)

மேலும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய், பூனை மற்றும் கால்நடைகள் யாருக்கு சொந்தமானது என்பதை எளிதில் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி கோழிக்கோடு மாநகராட்சியின் கால்நடை துறை அதிகாரி ஸ்ரீஸ்மா கூறும்போது, இந்த திட்டம் குறித்து கோழிக்கோடு மாநராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளோம். அனைத்து கவுன்சிலர்களும் ஏற்றுக்கொண்டால் இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வரும், என்றார்.

மேலும் படிக்க...

செல்லப்பிராணியின் இறுதிச்சடங்கா?- 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை!

வெள்ளத்தில் சிக்கிய யானை-காப்பாற்றும் முயற்சியில் பலியான புகைப்படக்காரர்!

English Summary: Dog and cat breeding fees - Beware of pet lovers! Published on: 28 September 2021, 09:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.