1. வாழ்வும் நலமும்

கல்யாணவீட்டு சுவையில் விருதுநகர் "பால் உருளைக்கிழங்கு"

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
FAMOUS VIRUDHUNAGAR PAAL URULAIKILANGU RECIPE

பண்டையகாலங்களிலிருந்து தமிழர்கள் பாரம்பரியமான சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவை உண்டு வாழ்கின்றனர். அந்தவகையில் நாம் இன்று தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான விருதுநகரில் "பால் உருளைக்கிழங்கு" கல்யாண வீட்டு சுவையில் எளிதாக எப்படி செய்யலாம் என்று விரிவாக பாப்போம்.

தேவையான பொருட்கள்:

 • முந்திரி - 10
 • கசகசா - ½ ஸ்பூன்
 • பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன்
 • ஏலக்காய் - 2
 • கிராம்பு - 2
 • பட்டை - 4
 • உருளைக்கிழங்கு - 3
 • பச்சைப் பட்டாணி - அரை கப்
 • பச்சை மிளகாய் - 4
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 1
 • பூண்டு - 4 துண்டு
 • இஞ்சி - 1 அங்குல துண்டு
 • அன்னாசிப்பூ - 2
 • பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • கறிவேப்பிலை - சிறிய அளவு
 • தேங்காய்ப்பால் - முதல் + இரண்டாம் பால்
 • தாளிக்க - தேங்காய் எண்ணெய்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல்நீக்கி வைத்துக்கொள்ளவும்

பச்சைப் பட்டாணியை தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவையுங்கள். அதனுடன் விருப்பத்திற்கேற்ப கேரட், பட்டர் பீன்ஸ் போன்ற காய்களையும் சேர்த்து வேகவைக்கலாம்.

2 பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து விழுதாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் பூண்டு மற்றும் இஞ்சியை நன்கு நசுக்கி வைக்கவும்.

 

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து பூண்டு, இஞ்சியைப் போட்டு லேசாக வதக்கவும்.

2 பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து ஒருசேர நன்கு வதக்கவும்

அடுத்து அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து சிலநேரம் வதக்கவும்.

இப்போது அதில் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

பிறகு அந்தக் கலவையில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியைச் சேர்க்கவும்.

தற்பொழுது முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைக்கவும்.

தற்போது சூடான சுவையான விருதுநகர் மண்வாசத்துடன் பால் உருளைக்கிழங்கு தயார்.

இதை சாதத்துடன் சாப்பிடுவதற்கு கொஞ்சம் கெட்டியான பதத்திலும், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு நீர்சேர்த்து தண்ணி பதத்திலும் ருசிக்கலாம்.

மேலும் படிக்க

ரேசன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை இலவசம்- அமைச்சரவை முடிவு

தூள் பறக்கும் "சிக்கன் ஊறுகாய்" எளிய முறையில்!

English Summary: FAMOUS VIRUDHUNAGAR PAAL URULAIKILANGU RECIPE Published on: 22 August 2023, 03:36 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.