
Image credit by: Telengana today
மேற்கத்தியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கத்திலும், பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டோம்.
இதன் விளைவாக சிறுவயதிலேயே குழந்தைகள் குண்டாவது, ஆண்- பெண் மலட்டுத்தன்மை, பெண்குழந்தைகள் விரைவில் பூப்படைதல், இதயம் சார்ந்த நோய்களுக்கு இளம் வயதினர் பலியாவது உள்ளிட்டவை அதிகரிக்கத்தொடங்கி விட்டன.
இவற்றில் இருந்து விடுபட, வருமானத்தின் பெரும்பகுதியை மருத்துவமனைகளுக்கு தாரைவார்க்கும் நிலையும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

credit by Wallpapersdsc.net
நொறுக்குத்தீனி (Junk Foods)
அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை நொறுக்குத்தீனியின் பக்கம் அன்றாடம் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி (Junk Foods) உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை என்பதை பலதரப்பட்ட மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
எனினும் நாக்கு ருசிக்கு அடிமையாகிவிட்டதால், அவற்றைத் தவிர்க்க மிகவும் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.அதிலும், கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்தபடி வேலைசெய்யும்போது, நொறுக்குத்தீனியே நமக்கு இன்றியமையாததாக மாறிவிட்டது.
உண்மையில், நொறுக்குதீனியை விரும்பி சாப்பிடுவதால், நம் உடம்பில் பல்வேறு நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம் என்பதே நிதர்சனம்.
அவ்வாறு நொறுக்குத்தீனியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவரா நீங்கள்? நொறுக்குத் தீனியைத் தவிர்க்க இதோ சில டிப்ஸ்கள்

credit by thefearlessindian.in
நீர் அதிகம் பருகுதல் (Drink lots of Water)
நம் உடலின் அனைத்து இயக்கத்திற்கும் அதிகளவு நீர் பருகுவது அவசியமான ஒன்றாகும். அதேநேரத்தில், பசியைக் குறைத்து, தாகத்தைக் தீர்க்கும் தன்மையும் தண்ணீருக்கு இருப்பதால், அதனை அதிகம் பருக வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கவும் இந்த தண்ணீர் உதவும்.
ஹெவி பிரேக் ஃபஸ்ட் (Eat a Heavy Breakfast)
காலை உணவை மிகவும் சத்தானதாகவும், பசிக்கு தீனி போடும் வகையிலும் அமைத்துக் கொள்ளுங்கள். விருப்பப்படி வயிறு நிறைய உண்ணுங்கள். காலை உணவுடன் அவித்த முட்டை, பழங்கள், பழச்சாறு போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். இது மதியம் வரை பசியைக் தாக்குப்பிடிக்கக் கட்டாயம் உதவும்.
ஸ்மாலர் மீல்ஸ் (Divide into smaller meals)
நாள் ஒன்றுக்கு மூன்று முறைதான் உணவு சாப்பிட வேண்டும் என்பது இல்லை. எனவே உங்கள் உணவை பிரித்துப் பிரித்து சிறுஉணவாக உண்ணுங்கள். சில மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு 6 அல்லது 8 முறை உண்பது உடல் எடையைக் குறைக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கும். இந்த சூத்திரம் பசி உண்டாவதைத் தடுப்பதுடன், நொறுக்குத்தினி என்ற எண்ணத்தை அறவே மறக்கச் செய்யும்.
வாரத்தில் ஒருமுறை (eat once a week)
இருப்பினும் உங்கள் நாக்கு மிகவும் விரும்பும் அந்த நொறுக்குத் தீனியை வாரத்தில் ஏதாவது ஒரு முறை சுவைக்கலாம். அனைத்து நாட்களும், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, ஒரு முறை நொறுக்குத் தீனியை சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெரிதாக பாதிக்கப்படாது.
ஆரம்பத்தில் இந்த யுக்தியைக் கையாண்டாலும், அது முழுக்க முழுக்க உடலுக்கு கேடு விளைவிப்பது என்பதை மனதில் பதியவைத்துக்கொண்டு, பிறகு நாக்கையும் கட்டுப்படுத்துங்கள்.
ஆரோக்கிய உணவு (Healthy eating habit)
ஆரோக்கியமான உணவையே உண்பது என்ற பழக்கத்தை நம் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அன்றாடம் சிறிது நேரம் உடற்யிற்சியையும் தவறாமல் கடைப்பிடித்தால், பல நோய்களுக்கு குட்பை சொல்வதுடன், நாள் முழுவதும், புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
Share your comments