1. வாழ்வும் நலமும்

உங்கள் குழந்தை தனிமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்தால் என்ன செய்யவது?

KJ Staff
KJ Staff

மாறிவரும் காலசூழ்நிலை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குழந்தைகளின் மீது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் தனிமைக்கு அடிமையாகி வருகின்றன. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் படிப்பு  சார்ந்து, பெற்றவர்கள் திட்டுவது, மற்றும் குடும்ப சூழல். பெற்றோர்களும் குழந்தைகளை புரிந்து கொள்ளாமல் தாங்கள் நினைப்பதை குழந்தைகள் மீது தின்னித்து விடுகின்றன. இதன் காரணமாக குழந்தைகள்  மன அழுத்தத்திற்கு உள்ளாகி  தனிமை அடைகின்றன.

பெற்றோர்களின் முகத்தில் பதற்றம் அல்லது மன அழுத்தம் இருந்தால் அது பிள்ளைகளின் மூளை பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் படிப்பு சார்ந்த பதற்றம் மேலும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் மிக எளிதில் அனைத்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி விடுகின்றன. மற்றும் அதில்  பார்க்கும் படங்களும் சமூக வன்முறை சார்ந்த வீடியோக்களும்  இவர்களின் தனிமைக்கும், மனஅழுத்தத்திற்கும் காரணமாக இருக்கின்றன. மேலும் இத்தகைய சூழலில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிக கோவம்,  தனிமை ஏற்படும். மற்றும் இது மற்ற குழந்தைகளையும்  பாதிக்கக்கூடியதாக அமையும்.

வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளுடன் மிக குறைந்த நேரமே செலவளிக்கின்ற சூழல் இருக்கும். இதனால் குழந்தை பெற்றோர் இடையே உரையாடல் மிக குறைவாக இருக்கிறது. இத்தகைய சூழலில் இருக்கும் குழந்தைகள் தனிமை அடைந்து வீட்டின் மூலையில் அல்லது தங்களது அறையிலேயே இருப்பார்கள். மேலும் அக்குழந்தைகளுக்கு பதட்டத்தில் நகம் கடிக்கும் பழக்கம், அதிகமாக யோசிப்பது போன்ற செயல்கள் ஏற்பட்டு விடும். பெற்றோர்கள் குழந்தைகள் முன்னே  சண்டை போடுவதால் குழந்தையின் மனதில் ஆழமான மாற்றம் ஏற்படும். இதனால் குழந்தை தனிமைக்கு  உள்ளாகிறது. மேலும் சந்தோஷமான சூழல் இல்லாமையால் குழந்தைகள் பாசத்திற்கு ஏக்கம் கொள்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரிடமும் இருந்து விலகி தனியாகவே இருக்க தொடங்கி விடுகின்றன .பெற்றோர்கள் திட்டிக்கொள்வதும், அடித்துக்கொள்வதுமான செயல்கள் புரிவதால் அவர்களுக்கு  இத்தகைய செயல்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மறந்து விடுகின்றன.

குழந்தைகள் பரிட்சையில் குறைந்த மதிப்பேன் எடுத்திருந்தாலோ அல்லது, பரிட்சையில் தோல்வியடைந்து விட்டாலோ பெற்றோர்கள் அவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால் இந்த செயல்கள் வாழ்க்கையின் முடிவல்ல தொடக்கமே என்பதை புரிந்து கொள்வதில்லை. தனிமையின் காரணமாக குழந்தைகள் பேசுவதை கூட விட்டு விடுகின்றன,  மேலும் தனது நண்பர்களுடன் பழகுவது போன்ற செயல்களை நிறுத்தி விடுகின்றன. வீட்டில் தினசரி சண்டைகளை பார்த்து பார்த்து குழந்தைகள் எரிச்சல் கொள்கின்றன இதனால் சிறு சிறு விஷயத்திற்கும் கோபம் கொள்வது போன்ற பழக்கம் ஏற்படுகிறது. மேலும் எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, மற்றும் அவர்கள் தாங்களாகவே முடிவு செய்து விடுகின்றன நம்மால் இனி எதுவும் செய்ய இயலாது என்று.

இத்தகைய சூழலில் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை புரிந்து கொள்ள முயலவேண்டும். அவர்களின் மனதில் உள்ளதை புரிந்து அதற்கு உதவ வேண்டும், அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க முயற்சிக்க வேண்டும் அவர்களுடன் உரையாட வேண்டும். தம்மை சுற்றி நல்ல சூழல் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் முன்னே சண்டையிடுவதை விட்டு விட்டு நல்ல பெற்றோர்களாக இருந்தால்  குழந்தைகளுக்கும்  பெற்றோர்களுடன் நேரம் செலவளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தேவையற்ற செயல்கல்  செய்தால் அதன் காரணம் அறிந்து அதனை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள  வேண்டும். ஆனால் தங்களது குழந்தை மீண்டும் மீண்டும் மன அழுத்தம், தனிமை நிலையில் இருந்தால் கண்டிப்பாக  மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியமாகும்.

English Summary: if your child suffering from depression and loneliness what should be done Published on: 20 April 2019, 05:14 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.