1. வாழ்வும் நலமும்

கவனம் கொள்ளுங்கள்! முத்தமிடுவதால் குழந்தைகளுக்கு வரும் நோய்த்தொற்று மற்றும் ஆபத்துக்கள்

KJ Staff
KJ Staff

குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது குழந்தைகளை பார்த்த உடனேயே அவர்களை கையில் எடுத்து கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். கையில் ஏந்தியும், மடியில் அமர்த்தியும், அவர்களின் அழகிய கன்னத்தில் முத்தம் கொடுக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இதுவே அவர்களுக்கு ஆபத்தாக அமைகிறது. புதிதாக பிறந்த  பச்சிளம் குழந்தைகளை முத்தமிடுவதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு கல்லீரல் பிரச்சனை மற்றும் மன, உடல் வடிவம் பாதிப்படைவதற்கான அபாயம் இருக்கிறது. வாருங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சனை பற்றி விரிவாக காண்போம்.

பிறந்த குழந்தைகளுக்கு HSV ஆபத்து

பெரும்பாலும் இந்த HSV  தொற்று இளைஞர்களிடையே காணப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றன ஏனென்றால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக மற்றும் வலுவாக இருக்கும். ஆனால் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் சருமம் மென்மையான மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்  நிலையில் இந்த நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் உயிரைக்கொளும் ஆபத்தான நோய்த்தொற்று

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பரவும் இந்த நோய்த்தொற்று அவர்கள் கன்னத்தில் முத்தமிடுவதால்  ஏற்படுகிறது, மேலும் அவர்களின் வாயில்  காயங்கள் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள் உடல் சோர்விழந்து உடல் ரீதியான பிரச்சனை,  மற்றும் குழந்தையின் உடல் பருமனடைந்து விடுகிறது. இந்த நோய்த்தொற்றின் காரணத்தால்  குழந்தையின் கல்லீரல் மற்றும் மூளை ரீதியான பாதிப்பு மிகவும் பெரிதளவில் ஏற்படுகிறது. இது குழந்தைகளின் உயிருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

குழந்தைகளிடையே நிமோனியா ஏற்படுவதற்கான  அபாயம்

காலநிலை மாற்றத்தினால்  குழந்தைகளிடையே வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக சூழல் உண்டு.  இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், இரும்பல், சளி அதிகரித்து விடுகிறது. இந்நிலையில் குழந்தையை யாரெனும் முத்தமிட்டாள் குழந்தைக்கு RSV என்ற வைரஸ் பரவக்கூடிய அபாயம் உண்டு. இந்த RSV வைரஸ் குழந்தையின் மூச்சுக்குழாய் அலர்ஜிக்கு காரணமாக அமைகிறது.  இதனால் குழந்தைக்கு நிமோனியா ஏற்படக்கூடிய சூழல் அதிகம்  உண்டு.

ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நோய்த்தொற்று  ஏற்படக்கூடிய அபாயம்

இந்த வைரஸ் காரணமாக உடல் சருமத்தில் காயம் ஏற்படும். மேலும் இந்த காயங்கள் வாயில், அல்லது முக்கிய  உடல் பகுதிகளில் ஏற்படும். இது உங்கள் பச்சிளம் குழந்தையின் வாயில் ஏற்படும் போது இதனை ஓரல் ஹெர்பெஸ் (oral  herpes) என அழைக்கப்படுகிறது.  HSV பச்சிளம் குழந்தைகளின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதால் ஏற்படுகிறது.

English Summary: be aware ! kissing can cause dangerous skin infection to babies Published on: 20 April 2019, 04:32 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.