1. வாழ்வும் நலமும்

நம் எலும்புகளுக்கு பலமளிக்கும் பாலின் மருத்துவ நன்மைகள்

KJ Staff
KJ Staff

பால் மனிதனின் உடல் ஆரோகியத்திற்கு ஒரு புனிதத்தன்மை கொண்டதாக பார்க்கிறோம்.  இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக  விளங்குகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே, உலகெங்கிலும் உள்ள மக்கள் பாலை உணவின் முக்கிய பகுதியாக கருதுகின்றனர். ஏனெனில் பாலில் வைட்டமின்- A, வைட்டமின்- B12 மற்றும் வைட்டமின்- D  அதிக அளவில் கிடைக்கின்றன. கூடுதலாக, கால்சியம், போஸ்போர்ஸ், செலினியம், கார்போஹைட்ரேட், மக்னிசியும்,  புரதம், துத்தநாகம் மற்றும் ரைபோபிளவின், போன்ற பண்புகளும் கிடைக்கின்றன.

பாலில் கால்சியம் மிகவும் அதிகமாக உள்ளது. உடலில் கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோயிகளைத் தடுக்க பால் உதவுகிறது. பால் உடலில் அதிக கொழுப்பை நீக்குகிறது. பாலில் உள்ள கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும்.  பால் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையைத் தடுப்பதில் கால்சியம் மற்றும் வைட்டமின்- D உதவுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், வெளிநாடுகளிலும் பாலின் தேவை அதிகரித்து வருகிறது. அதிக கால்சியம் சத்துக்களை பெற பால் போன்ற மற்ற கால்சியம் உள்ள உணவுகளை உட்கொள்ள அவேண்டும்.

பாலைப்போல ஆரஞ்சிலும்  கால்சியம் நிறைந்துள்ளது. ஆரஞ்சில் 60 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவும் அருமையானப்பழம். இதில் கால்சியத்துடன் வைட்டமின் "டி"யும் உள்ளது.. இது நம் எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதானது. எனவே, எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

English Summary: make your bones healthy and strengthen , health and nutritional benefits

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.