1. Blogs

பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பு! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit by : Wix.com

நவீனமயம், பொருளாதாரம், ஆடம்பரம், தொழில்நுட்பம் என இப்படி எத்தனையோ விஷயங்கள் தற்போதைய சூழலில் நம்மை ஆட்டி படைத்து வருகிறது. என்ன படித்தாலும் என்ன வேலையில் இருந்தாலும் பண நெருக்கடி என்பது எல்லோரிடமும் இருக்கவே செய்கிறது.

முன்பெல்லாம் வீட்டு வணிகத்தை ஈடுசெய்ய ஆண்கள் மட்டுமே போராடி வந்த நிலையில் தற்போது பெண்களும் தங்களில் குடும்ப நிலையை சமாளிக்க ஆண்களுக்கு சமமாக சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இன்றும் பல பெண்கள் வீட்டு சூழல், குழந்தைகள் பராமரிப்பு, போன்ற காரணத்தால் வீட்டில் இருந்த படி இருக்கும் வேலைகளை அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அது போன்று கிடைக்கும் வேலைகள் நிலையானதாகவும், நல்ல வருமானம் தரக்கூடியதாக இல்லை.

இதனால் வீட்டில் இருக்கும் பல பெண்கள் சொந்த தொழில் செய்ய அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அதை எப்படி தொடங்குவது, எந்த தொழிலில் அதிகம் லாபம் கிடைக்கும், எதில் குறைந்த முதலீடு மூலம் நல்ல லாபம் பெற முடியும் என்று பல குழப்பத்தில் இருக்கும் பெண்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் சில எளிய சுய தொழில் முறைகளை இங்கே காணலாம்.

ரொட்டி தயாரிப்பு : (BREAD MAKING)

தற்போதைய காலக்கட்டத்தில் எல்லோர் வீடுகளில் இருக்கும் உணவு பொருளாக இருந்து வருவது பிரெட் (Bread) வகைகள் தான், அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி வேலைக்கு செல்லும் வீடுகளில் அதிகம் சாப்பிடும் உணவாக பிரெட் மாறி இருக்கிறது. இதனால் இந்த காலக்கட்டத்தில் பிரெட் தயாரிப்பு தொழில் வீட்டில் இருந்து சுய தொழில் செய்யும் பெண்களுக்கு ஒரு லாபகரமான தொழிலாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் ரொட்டி தயாரிக்கும் வணிகத்தை தேர்ந்து எடுத்து தொடங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வணிகமானது மிகக் குறைந்த முதலீடு மற்றும் குறைந்த நேரத்தையும் எடுத்துக் கொள்வதுடன் வீட்டில் இருந்த படியே செய்யப்படுவதால் எளிதாக தொடங்கலாம். இது மிகச் சிறந்த வேலைவாய்ப்பாக பெண்களுக்கு அமையும்.

Credit by: ArabNews

திரைச்சீலைகள் தயாரிப்பு (CURTAIN MAKING)

எல்லோர் வீட்டிலும் நாம் காண்பது திரைச்சீலைகள், சாதாரன திரைச்சீலைகள் முதல் வண்ணமயமான அலங்கார திரைச்சிலைகள் வரை எல்லோராலும் விரும்பி வாங்க கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. தையல் தொழிளில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு இது மிகவும் லாபகரமான தொழிலாக இருக்கும்.

பெண்கள் தங்களின் கற்பனைக்கு ஏற்ற வாரு வீட்டிலிருந்தே திரைச்சீலைகளை கலை நயத்தோடு வண்ணமயமாக தயாரிக்கலாம், இந்த தொழிலுக்கு அதிக மூதலீடுகள் தேவை இல்லை, மிக குறைந்த செலவே ஆகும். இது போன்ற தொழில்களில் உங்களின் ஆற்றல் வெளிப்படும் போது, இதற்கான லாபமும் அதிகமாக கிடைக்கும்.

Credit By : GiveInida

வாசனை திரவியங்கள் (Perfume Making)

வாசனை திரவியங்கள் அனைவராலும் ஈர்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாகும், நாம் அன்றாடும் பணிக்கு செல்லும் போதும், பண்டிகைகளுக்கு செல்லும் போதும் எல்லோரும் பெர்ஃபியும்களை (Perfume) பயன்படுத்துவது வழக்கம், இதன் வாசம் மற்றும் ரசனைகள் ஒருவருக்கொருவர் மாறுபடும் ஆனால் அனைவரும் விருப்பக்கூடிய ஒன்று. அனைவரின் ரசனைக்கு ஏற்ப நாம் பெர்ஃபியும்களை (Perfume) தயாரிக்க தொடங்கினால் நிச்சயம் இதில் நல்ல லாபம் பெற முடியும். இதற்கு நாம் அதிகம் செலவு செய்ய வேண்டியது இல்லை, குறைந்த செலவில் நல்ல லாபத்தினை நாம் பெற முடியும்

Credit By : Our Oily House

மேற்கூறிய வணிக யோசனைகள் வீட்டில் இருந்த படியே பெண்கள் பல ஆன்லைன் முறைகள் மூலமும் அல்லது யூட்டியுப் Youtube மூலமும் தெரிந்து கொல்ல முடியும். இதற்காக நாம் அதிக தொகை செலுத்த தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே முயற்சிப்போம் முன்னேறுவோம்.

 

மேலும் படிக்க...

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

PM-KMY: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்...இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு!

English Summary: Self-employment opportunity for women! High return on low investment !! Published on: 15 June 2020, 10:21 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.