1. வாழ்வும் நலமும்

மக்களே உஷார்: கொரோனா வைரஸ் போல மற்றொரு தொற்றுநோய்!

R. Balakrishnan
R. Balakrishnan
People beware

கோவிட்-19 தொற்று நோய்க்கு இணையாக, மற்றொரு தொற்றுநோய் வயது, ஆண் அல்லது பெண் மற்றும் பொருளாதாரம் என எதையும் பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் வளர்ந்து பரவி வருகிறது. இது மன அழுத்தம் (Stress) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் கண்டறியப்படாத மற்றும் யாரும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத ஒரு நோயாகவும் உள்ளது. ஒருவரின் மன ஆரோக்கியம் என்பது உளவியல் சார்ந்த மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நல்வாழ்வுடன் தொடர்புடையது. இது ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான ஆதாரம் ஆகும்.

ஒருவரின் மனமானது, சமூகம் சார்ந்த உணர்ச்சிபூர்வமான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் இரண்டு விதமாக உள்ளது. முதலாவது, கொரோனா வைரசின் நேரடி விளைவுகள் காரணமாகவும் இரண்டாவது குழந்தைகள், இளம் தலைமுறையினர் மற்றும் வயதானவர்கள் என அனைவரிடமும் ஏற்பட்டுள்ள புதிய வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாகவும் ஏற்பட்டுள்ளது.

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம் என்பது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது சிறப்புத் தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே அவசியம் என்ற நம்பிக்கை இன்னும் நம்மில் பலரிடம் உள்ளது. ஆனால், மன ஆரோக்கியம் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்றுதான் என்பதை நான் கூறு விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் வீடு, குடும்பம், நண்பர்கள், வேலை உள்ளிட்ட பல்வேறு விதமான உணர்ச்சிபூர்வமிக்க விஷயங்களை சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.

இவற்றில் ஏதேனும் ஒன்று சமமற்ற நிலையில் இருந்தால் அதன் காரணமாக பல்வேறு மனம் சார்ந்த இன்னல்களுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். நாம் நமது வாழ்க்கையை அனைத்து அம்சங்களுடன் சிறப்பாக வாழவும் நமது வாழ்க்கையில் முன்னேறவும் சமூக அமைப்பு என்பது மிகவும் அவசியம். இது குறித்து நாம் நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூறுவது மிக முக்கியம். நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.

அவை, சுயமரியாதையை மேம்படுத்திக் கொள்ளுதல், சொல்வதை தெளிவாக சொல்லுதல், உணர்ச்சிமிக்க துயரங்களை எதிர்கொள்ளுதல் ஆகியவை ஆகும். வேலை அல்லது பள்ளியில் ஏற்படும் தடைகளை எதிர்கொள்ள தெளிவாக சிந்தித்து அதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை திறம்பட கையாள வேண்டும். மிக முக்கியமாக, ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை அடையாளம் கண்டு அதற்கான பரிசோதனை மேற்கொண்டு அதற்கு முறையான சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

மிக முக்கியம்

வயது, பாலினம், சமூக அந்தஸ்து, திருமணமானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் மன ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். சரியான விஷயங்களை கேட்டறிந்து அதனை பின்பற்றி ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

மேலும் படிக்க

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு

சளி காய்ச்சலை விரட்டியக்கும் வீட்டு வைத்தியம்

English Summary: People beware: Another epidemic like the corona virus! Published on: 13 October 2021, 07:30 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.