1. வாழ்வும் நலமும்

உங்களிடம் ஏசி இருக்கா? இந்த 7 விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Reducing AC Electricity Bills in 7 simple steps to follow

கத்தரி வெயில் முடிந்த நிலையிலும் இன்னும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் ஏசி-யின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில் மின் கட்டணம் பன்மடங்கு உயர்வதை தடுத்து பணத்தைச் சேமிக்க கீழ்க்கண்ட யோசனைகள் கைக்கொடுக்கும் என வல்லூநர்கள் கருதுகின்றனர்.

தெர்மோஸ்டாட்(Thermostat) அமைப்பை தீர்மானியுங்கள்:

கோடை மாதங்களில் உங்கள் தெர்மோஸ்டாட்டை அதிக வெப்பநிலையில் வைக்கவும். நீங்கள் வெப்பநிலையை உயர்த்தும் ஒவ்வொரு டிகிரியும் உங்கள் ஆற்றல் கட்டணத்தில் கணிசமான தொகையைச் சேமிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது அல்லது தூங்கும்போது வெப்பநிலையை தானாகவே சரிசெய்ய, ஆட்டோமெட்டிக் தெர்மோஸ்டாட்டைப் பயன்படுத்தவும்.

விசிறிகளை பயன்படுத்துங்கள்:

AC ஆன் செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு விசிறிகள் (FAN) ஆன் செய்யவும். குளிர்ந்த காற்றானது அறை முழுவதும் வேகமாக சுற்றவும், அறையை மிகவும் வசதியாக உணரவும் விசிறி உதவும்.  உயர் மின்விசிறிகள் அல்லது போர்ட்டபிள் ஃபேன்களைப் பயன்படுத்துங்கள், இது தெர்மோஸ்டாட்டின் வெப்பநிலையை உயர்த்த உங்களுக்கு உதவும்.

கதவுகளின் இடைவெளியை சரியாக மூடுங்கள்:

உங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் ஏதேனும் இடைவெளிகள் உள்ளதா என சரிபார்க்கவும். இடைவெளி இருப்பின் குளிர்ந்த காற்று வெளியேறும் அல்லது வெப்பக் காற்று உள்ளே நுழைய வாய்ப்புண்டு. இந்த இடைவெளிகளை மூடுவதற்கும், உங்கள் ஏசியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வெதர்ஸ்ட்ரிப்பிங் அல்லது கால்க்கைப் பயன்படுத்தவும்.

திரைச்சீலைகளும் உதவும்:

சூரிய ஒளியானது உங்கள் வீட்டில் வெப்பநிலையை அதிகரிக்கலாம், இதனால் உங்கள் ஏசி இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நேரடி சூரிய ஒளியை உள்புகுவதை தடுக்கும் வண்ணம் திரைச்சீலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

ஏசி யூனிட்டை முறையாக பராமரிக்கவும்:

முறையான காற்றோட்டம் மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்த உங்கள் ஏசி வடிப்பான்களை (filter) தவறாமல் சுத்தம் செய்யவும் அல்லது மாற்றவும். தொழில்முறை பராமரிப்பை திட்டமிட்டு பின்பற்றுவது உங்கள் ஏசியின் ஆயுள்காலத்தையும் நீட்டிக்க செய்யும்.

உபகரணங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்:

ஏசிக்கு எப்போதும் வேலை அதிகரிக்கும் என்றால் அறையின் வெப்பநிலை உயரும் போது தான். ஓவன்கள், உலர்த்திகள் மற்றும் பாத்திரங்கழுவி (dishwashers) போன்ற சாதனங்கள் வெப்பத்தை உருவாக்குகின்றன. உங்கள் அறையின் வெப்பம் அதிகரிப்பதை தவிர்க்க மேற்குறிப்பிட்ட பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்.

இயற்கையான காற்றோட்டத்தைப் பயன்படுத்தவும்:

குளிர்ச்சியான மாலை அல்லது அதிகாலை சமயங்களில் வெயில் காலத்திலும் வெப்பநிலையானது குறைவாகவே இருக்கும். அதுப்போன்ற நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து குளிர்ந்த காற்று புழக்கத்தை அறையினுள் அனுமதிக்கவும்.

மேற்குறிப்பிட்ட விஷயங்கள் ஏசியின் பயன்பாட்டை கட்டுபடுத்தவும், அதனால் மின் கட்டணத்தில் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கும் என்றாலும், தேவையற்ற நேரங்களில் விளக்கு, ஏசி, போன்ற மின் பொருட்களினை அணைக்கும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த சிறிய பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க ஆற்றலையும், பணத்தையும் சேமிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் காண்க:

முட்டை குறித்த தவறான புரிதலும், அதற்கான பதிலும் இதோ..

ஒரே ஒரு போட்டோவினால் லட்ச ரூபாயை இழந்த மாங்காய் விவசாயி!

English Summary: Reducing AC Electricity Bills in 7 simple steps to follow Published on: 24 June 2023, 05:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.