1. வாழ்வும் நலமும்

குளிர்காலம் வந்தாச்சு...! : மூச்சுவிட கஷ்டமா இருக்கா.. சீக்கிரம் இந்த விஷயங்கள் எல்லாம் டிரை பண்ணுங்க!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit: Zee news

குளிர்காலத்தில் ஏற்படும் சலதோஷம், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை சில பொருட்களைக் கொண்டே விரட்ட முடியும். எந்த வகையான வீட்டுப் பொருட்கள் நமக்கு உதவி செய்யும் என அறிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களின் வரத்து அதிகம். எனவே குளிர்காலத்தில் இந்த நோய்களை வருமுன் காப்பது அவசியம். அதற்கு நம் உடலை நோயெதிர்ப்பு சக்தி மிக்கதாக ஆக்க வேண்டும். மேலும் குளிரான காற்று சுவாசப் பாதையில் படும்போது நிறைய பேருக்கு சுவாச பிரச்சினைகள், மூக்கடைப்பு, தொண்டை புண் போன்றவற்றை பெறுகின்றனர். சளி தேங்கி போய் நுரையீரலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு அறிக்கையின்படி, உலகின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 92% நச்சு மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசிக்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு சுவாச பிரச்சனை என்பது வருகிறது. காற்றில் இருக்கும் சிறிய தீங்கு விளைவிக்கும் நச்சுத் துகள்கள் உங்கள் சுவாச மற்றும் இருதய அமைப்பை மிகவும் சேதப்படுத்தும்.

இருதய செயலிழப்பு காரணமாக இறப்புகள் ஆண்டுக்கு 6 மில்லியன் இறப்புகளாக பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே குளிர்காலத்தில் உங்க சுவாச பாதையை ஆரோக்கியமாக வைக்க கீழ்க்கண்ட எளிய வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன.

Credit: Badgut.org

புகைப்பிடித்தலை தவிருங்கள்

உங்க சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க முதலில் வாழ்க்கை முறை மாற்றத்தை கொண்டு வருவது அவசியம். பல ஆண்டுகளாக புகைப்பிடிப்பது உங்களுக்கு சுவாச பிரச்சினைகள், கடுமையான நுரையீரல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொற்றுகளையும் ஏற்படுத்தும்.எனவே புகைப்பிடிப்பதை தவிர்ப்பது உங்க சுவாச பாதை ஆரோக்கியத்திற்கு உதவும்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள்

குளிர் காலங்களில் காற்று மாசுபாடு மற்றும் நச்சுகளின் விளைவுகள் அதிகமாக இருக்கும். எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீட்சி சுவாசம், உதரவிதான சுவாசம் போன்ற யோகா ஆசனங்களை செய்து வருவது நல்லது. உங்க நுரையீரலை சுத்தப்படுத்தவும் உதவி செய்யும்.

நீராவி பிடித்தல்

இது ஒரு பழைய முறை என்றால் கூட சுவாச பாதையில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் சளி பிடித்து நெஞ்சு சளி, மூக்கடைப்பு இருந்தால் சுடுதண்ணீரை கொதிக்க வைத்து நீராவி பிடிக்கும் செயல்முறையை செய்து வரலாம்.

இஞ்சி பானம்

நீங்கள் சுவாச பிரச்சினைகள் மற்றும் நாசி நெரிசலால் பாதிக்கப்படும்போது இஞ்சி ஒரு சிறந்த நிவாரணப் பொருளாகும். எனவே இஞ்சி தேன் சேர்த்து டானிக் தயாரிக்கலாம். இது குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை புண்ணை ஆற்றவும் சளியை வெளியேற்றவும் உதவி செய்யும்.

 

​உப்பு தண்ணீர் கொண்டு கொப்பளியுங்கள்

இது ஒரு மிக எளிய முறை என்றால் கூட சிறந்த முறை ஆகும். இருமல் மற்றும் மூக்கடைப்பு இருக்கும் போது வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை போட்டு தொண்டையில் படும்படி கொப்பளித்து வரலாம். தொண்டை புண்ணை ஆற்றவும் சளியை வெளியேற்றவும் உதவுகிறது.

தேன் மற்றும் துளசி

தேன் மற்றும் துளசியில் கிருமிகள்,தொண்டை நோய்த்தொற்றுகள் மற்றும் வலியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும் சில பண்புகள் உள்ளன. குளிர் மற்றும் இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களின் தாக்குதல்களிலிருந்து உங்கள் சுவாச மண்டலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தினமும் காலையில் ஒரு துளசி இலைகளுடன் ஒரு தேக்கரண்டி ஆர்கானிக் தேனை எடுக்க முயற்சி செய்யுங்கள். இது சளியை வெளியேற்றவும் இருமலை விரட்டவும் உதவுகிறது.

மேலும் படிக்க 

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் பலப்பல திட்டங்கள்! முழு விவரம் உள்ளே

English Summary: Take This easy home remedies to cure breathing illness during winter season

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.