1. வாழ்வும் நலமும்

நீங்கள் பயன்படுத்தும் பெருங்காயம் கலப்படமானதா என்பதை கண்டறிய எளிய வழி!

Aruljothe Alagar
Aruljothe Alagar

The easiest way to find out if the hing you use is adulterated!

பெருங்காயம் உண்மையானதா அல்லது கலப்படமானதா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது  என்று தெரிந்துகொள்ளலாம். பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. கலப்படமான பெருங்காயம் உணவின் சுவையை மாற்றுகிறது. பெருங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பெருங்காயத்தை உட்கொள்வதன் மூலம் பல நோய்கள் குணமாகும். ஆனால் இப்போதெல்லாம் உண்மையான பெருங்காயத்தை விட போலி பெருங்காயம்  சந்தையில் அதிகம் விற்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சாப்பிடும் பெருங்காயம் உண்மையா அல்லது போலியா என்பதை அறிவது சில நேரங்களில் மிகவும் கடினமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெருங்காயம் சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இன்று உண்மையான பெருங்காயம் மற்றும் போலி பெருங்காயத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.

உண்மையான பெருங்காயத்தின் நிறம் வெளிர் பழுப்பு நிறமாகும். சூடான நெய்யில் போடும்போது, ​​அது பொரிய தொடங்கி, நிறம் வெளிர் சிவப்பு நிறமாக மாறும்.

தண்ணீரில் உண்மையான பெருங்காயத்தை கலந்தால் தண்ணீரின் நிறம் பால் போல வெண்மையாகிறது.

உண்மையான பெருங்காயத்தை எரித்து பார்த்தோமானால் எளிதில் எரியும், அதேசமயம் போலி பெருங்காயம் விரைவாக தீப்பிடிக்காது.

நீங்கள் உண்மையான பெருங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பினால், பொடியாக விற்கப்படும் பெருங்காயத்திற்கு பதிலாக, கட்டி பெருங்காயம் வாங்கி வீட்டிலேயே அரைத்து கொள்ளலாம்.தூளாக விற்கப்படும் பெருங்காயம் அதிக கலப்படமானது, ஆனால் கட்டி பெருங்காயம் விலை மலிவானது.இதனை நாம் எந்த வித சந்தேகமின்றி பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க..

இறக்குமதியை குறைக்க இந்தியாவில் அதிகளவில் பெருங்காயம் சாகுபடி - இமயமலையில் சோதனை!

English Summary: The easiest way to find out if the hing you use is adulterated!

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.