1. வாழ்வும் நலமும்

பல் துலக்கும்போது கவனிக்க வேண்டியவை- பிரஷை 45 டிகிரி வளைப்பது சரியா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Things to look out for when brushing teeth- Is it okay to bend the brush 45 degrees?
Credit : Unsplash

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் முகத்தின் அழகை, இளமையைத் தக்கவைத்துக்கொள்ள பற்கள் மிக மிக இன்றியமையாதவை. எனவே பற்களைத் துலக்கும்போது, செய்யக்கூடியத் தவறுகள் என்பதைத் தெரிந்துகொண்டால், பராமரிப்பு எளிமையானதாக மாறிவிடும்.

பல் துலக்குதலின் நுட்பங்கள் (Techniques for brushing teeth)

பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷைக் கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறுத் தேய்ப்பது ஈறுகளைக் காயப்படுத்தக்கூடும்.

பிரஷ்கள் தேர்வு (Choose brushes)

பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய பற்களை கொண்டவர்கள் பெரிய பிரஷை பயன்படுத்தும்போது ஈறுகளை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் போகலாம்.பிரஷை அழுத்தித் தேய்க்கும்போது ஈறுகளுக்கு காயமும் ஏற்படலாம்.

பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள் மற்றும், உணவு துகள்களை அப்புறப்படுத்த முடியாமல் போகலாம். எனவே மென்மையான பிரஷ்களைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.

அடிக்கடி மாற்றுதல் (Change frequently)

பற்களின் தன்மைக்கு ஏற்ப பிரஷ் வளைந்து கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கும் பிரஷை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சிலர் உபயோகிக்கும் பிரஷில் உள்ள தூரிகைகள் சில நாட்களிலேயே உதிர தொடங்கிவிடும். எனவே அத்தகையப் பிரஷைப் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பிரஷை மாற்றிவிடுவதே நல்லது.

நேரம் ஒதுக்குதல் (Allocating time)

காலையில் தாமதமாக எழுந்திருக்கும்போது அவசர அவசரமாகப் பல் துலக்கிவிட்டு கிளம்ப நேரிடும். எனவே இதனைக் கவனத்தில்கொண்டுப் பல் துலக்குவதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.


தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் பொறுமையாக பல் துலக்க வேண்டும். காலையும் மாலையும் இரண்டு வேளையும் பல் துலக்குவது அவசியமானது. பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்திப் பல் தேய்க்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் பல் இடுக்குகளும் சுத்தமாகாது. அங்கு பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது.

45 டிகிரி கோணம் (45 degree angle)

அதனால் பல் வலி போன்ற பல் பிரச்சினைகள் உருவாகும். பிரஷைக் கொண்டு மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பல் துலக்கும்போது பற்களின் மேல் பகுதியை சுத்தம் செய்வதற்குத்தான் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஈறுகளுக்கு இடையில் உள்ள பகுதிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஈறுகளில் ரத்தப்போக்கு, பல்வலி போன்ற பிரச்சினைகள் இதனால்தான் உண்டா கின்றன. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வளைத்து பற்களை சுத்தப்படுத்த வேண்டும்.

வாய் கொப்பளித்தல் (Rinsing mouth)

சாப்பிட்ட பிறகு பற்களில் தங்கி இருக்கும் உணவு துகள்களை அகற்றுவதற்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலர் சாப்பிட்ட பிறகும் பல் துலக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்ட பிறகு கால் மணி நேரம் கழித்துதான் பல் துலக்க வேண்டும்.

மேலும் படிக்க...

இயர்போன் பயன்படுத்துவதால் இத்தனைப் பிரச்னைகள் வருமா!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: Things to look out for when brushing teeth- Is it okay to bend the brush 45 degrees? Published on: 04 October 2021, 10:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.