1. வாழ்வும் நலமும்

துளசியை அதிகமாக எடுத்துக்கொள்வது, இத்தனைப் பக்கவிளைவுகளை உண்டாக்கும் - மக்களே உஷார்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Holy Basil
Credit : NewsGram

துளசி அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மூலிகை. அதேநேரத்தில் துளசியால் உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்தும் அறிவது அவசியம்.

மூலிகைகளின் அரசி (Queen of Herbs)

துளசி மூலிகைகளின் அரசி. இது பலவிதமான நன்மைகளை வழங்கக்கூடியது. அதனால்தான் கை வைத்தியத்தில் துளசிக்குத் தனி மரியாதை உண்டு. வீட்டில் பெரியவர்கள் அவசரத்துக்கு துளசியை தான் மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இன்றும் கிராமங்களில் சளி, காய்ச்சல், இருமலுக்கு துளசி பெரிதும் உதவக்கூடும். இவை எல்லாமே உண்மைதான்.

பக்கவிளைவுகள் (Side effects)

ஆயுர்வேதத்தில் முக்கியமான மூலிகை துளசி தான். அதே நேரம் துளசியை அதிகமாகப் பயன்படுத்தும் போது சில பக்கவிளைவுகளும் உண்டாகக்கூடும். எனவே இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

யூஜெனோல் (Eugenol)

துளசியில் யூஜெனோல் அதிகமாக உள்ளது. துளசியை அதிகமாக நுகரும்போது, யூஜெனோல் அளவு அதிகரிக்க செய்யும். இவை உடலுக்கு அதிகமாக செல்லும் போது தீங்கு விளைவிக்கக் கூடியவை.

அதிகமாக நுகர்ந்தால் (If consuming too much)

இருமலின் போது இரத்தபோக்கை உண்டாக்கும். விரைவான சுவாசத்தை கொடுக்கும். சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் துளசியை அதிகமாக நுகர்ந்ததால் வந்திருக்கலாம்.

இரத்தம் மெலிதல் (Blood thinning)

உடலில் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் தன்மையும் துளசிக்கு உண்டு. அளவாக எடுக்கும் போது இந்த பிரச்சனைகள் வராது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனை வரலாம். உறைதல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் துளசியை சேர்க்க கூடாது.

இரத்தம் மெலிதல் தீவிரமாகும் போது சிராய்ப்பு மற்றூம் நீடித்த இரத்தபோக்கு பிரச்சனையை எதிர்கொள்வீர்கள்.

சர்க்கரை அளவு (The amount of sugar)

இரத்த சர்க்கரையின் அசாதாரண அளவு குறைந்த நிலை தான் இரத்த சர்க்கரை அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது. இது நோய் அல்ல. ஆனால் ஆரோக்கிய குறைபாட்டுக்கான பிரச்சனை ஆகும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கத் துளசியை எடுக்கிறார்கள்.

ஆனால் நீரிழிவைக்கக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள், இரத்த சர்க்கரை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாக்கும்.இவர்களுக்கு தலைச்சுற்றல், பசி, பலவீனம், எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.

மலட்டுத்தன்மை (Infertility)

ஆண்கள் அதிகமாகத் துளசியை சாப்பிடும் போது அவர்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு (For pregnant women)

  • கர்ப்பிணிப் பெண்கள் துளசியை அதிகமாக உட்கொள்வது தாய்க்கும் குழந்தைக்கு நீண்ட கால விளைவுகளை உண்டாக்கும். துளசி இலைகளைக் கர்ப்பிணிகள் அதிக அளவு நீண்ட காலம் எடுத்துகொண்டால், அது எதிர்வினைகளை தூண்டக்கூடும்.

  • துளசியைக் கருவுற்ற தொடக்கத்தில் சாப்பிடும் போது அது கருப்பை சுருக்கத்தை உண்டாக்க செய்யலாம்.

  • கர்ப்பிணிகள் துளசியை அதிகம் எடுக்கும் போது முதுகுவலி, பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தபோக்கை உண்டாக்கச் செய்யலாம்.

துளசியின் தலையீடு (Intervention of Tulsi)

துளசி நல்லது. ஆரோக்கியமானது. ஆனால் நோய்க்காக மருந்துகள் எடுக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தில் தலையிடக்கூடும். மருந்துகளோடு துளசியையும் எடுத்துக் கொள்ளும்போது, இரத்தத்தில் உள்ள மருந்துகளின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோச் செய்யலாம்.

அம்னெசிக் விளைவு (Amnesic effect)

குமட்டல், வாந்தி பதட்டம் ஆகியவற்றைக் குறைக்கும் மருந்துகள் எடுக்கும்போது, துளசி எடுப்பது அதன் அம்னெசிக் விளைவை குறைக்கலாம். இது நெஞ்செரிச்சல், இலேசான தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வெளிப்படுத்தும்.

பக்கவிளைவுகளை மறக்கக்கூடாது (Side effects should not be forgotten)

மூலிகைகள் மட்டுமல்ல, ஆரோக்கியம் தரும் இயற்கை பொருள்கள் எல்லாமே  நமக்கு நன்மை செய்யகூடியவை என்றாலும், அவை பக்கவிளைவுகளையும் உண்டாக்குபவை என்பதை நாம் மறக்கக்கூடாது.

இவைக் குறிப்பிட்ட சில நோய்கு சிகிச்சை அளிக்கலாம். நோயை முற்றிலும் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது பக்க விளைவுகளிலிருந்து விலகிவிடாது.

விதிவிலக்கல்ல (No exception)

அதற்காகத் துளசியை முற்றிலும் நிறுத்திவிடத் தேவையில்லை. இதனைக் குறைந்த அளவில் எடுத்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். எப்படியானாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். இதற்கு துளசியும் விதிவிலக்கல்ல.

மேலும் படிக்க...

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

துவரையின் மருத்துவ பயன்கள்

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கொடிமுந்திரி

English Summary: Too much Tulsi can have these side effects - people beware! Published on: 02 May 2021, 10:49 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.