1. வாழ்வும் நலமும்

உடல் எடை குறைப்பால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

R. Balakrishnan
R. Balakrishnan
Weight Loss

உடல் எடையை குறைக்க உணவு முறையில் மாற்றம், உடற்பயிற்சி என பல வகையாக சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் உடல், மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போம். முதல் வாரத்தில் ஆரோக்கியமான டயட் முறைக்கு மாறும் போது முதலில் எளிதாக உணர்வீர்கள். ஆனால் மெட்டபாலிசம் மாறுகையில், வழக்கமான அளவுக்கு கலோரியை எடுத்து கொள்ள முடியாது. எனவே கூடுதலாக எடை குறைக்க முடியாமல் கடினமாக உணர்வீர்கள். இது மோசமடைந்தால், கொழுப்பு உருகுவதால், நீங்கள் பசியின்மை அதிகரிப்பை அனுபவிக்கத் துவங்குவீர்கள்.

லெப்டின் அளவு (Leptin levels)

உணவு உண்டதற்கு பிறகு, கொழுப்பு செல்கள், லெப்டின் என்ற ஹார்மோனை ரத்த நாளங்களில் வெளியிடும். இந்த லெப்டின் அளவு அதிகரித்தால், ஏற்கனவே வயிறு நிரம்பிவிட்டது. எனவே சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று உங்கள் மூளைக்கு சமிக்ஞை செய்யும். பொதுவாக, குறைந்த கொழுப்பு கொண்டவர்கள் உடலில், லெப்டின் அளவு குறைவாகவே காட்டும்.

10 சதவீதம் உடல் எடையை குறைத்தவர்களின் மூளையை ஸ்கேன் செய்த போது, அவர்களின் உடலில் காணப்படும் குறைந்த லெப்டின், மூளையின் செயல்பாடுகளை அதிகரித்து, உணவு எடுத்து கொள்வதற்கான கட்டுப்பாட்டை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது.
ஒட்டுமொத்த இறுதி முடிவுகளில், பசி அளவை அதிகரித்திருப்பதோடு மட்டுமின்றி, உங்கள் மூளை, உடலின் லெப்டின் அளவை மீட்டெடுக்க முயற்சிப்பதால் கொழுப்பு, அதிக கலோரி உணவுகளை உண்ண வேண்டும் என்ற வலுவான ஆசையை உருவாக்கும்.

உடல் எடை குறைப்பு (Weight Loss)

இருப்பினும், பீட்சா போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதற்கான தூண்டுதலுக்கு எதிராக போராடுவது நீண்ட காலத்திற்கு மதிப்பளிக்கும். 'இது தவிர, இதய பாதிப்புகளுக்கான அபாயம், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோய் அபாயம் குறையும். உடல் பருமன் கொண்டவர்களை ஆய்வு செய்ததில், ஒரு கிலோ உடல் எடையை குறைப்பதால், முழங்கால் மூட்டுகளில் 4 கிலோ அழுத்தத்தை குறைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

உடல் எடையை குறைப்பது ரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்கும் சிகிச்சை மேற்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு
ஆய்வுகளில், 3 மாதங்களில் ஞாபக சக்தி, கவனம், பிரச்னைகளை தீர்க்கும் திறன்
மேம்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், 9 மாதங்களுக்கு பிறகு அதிக கலோரி கொண்ட உணவுகளின் புகைப்படங்களை காட்டும் போது, முந்தைய பருமனான நிலையில் இருந்ததை விட சற்று வித்தியாசமாக உணர துவங்கியுள்ளனர். சுவை உணர்தல் போன்றவற்றை செயலாக்கும் மூளைப் பகுதிகள் வலுவாக மாற்றமில்லை. அதேசமயம் ஒட்டுமொத்தமாக சுயக்கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் பகுதிகள் மேம்பட்டுள்ளது. எனவே பசியை ஆரம்பத்தில் எதிர்த்து போராடுவது, பின்னர் அவற்றை கட்டுப்படுத்துவதை எளிதாக்கும். மற்றவற்றை போலவே, உடல் எடையை குறைப்பது நடைமுறையிலும் எளிதாக இருக்கும்.

மேலும் படிக்க

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?

குழந்தைகளைத் தாக்கும் தக்காளி காய்ச்சல்: நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary: What are the changes in the brain caused by weight loss? Published on: 22 August 2022, 09:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.