1. வாழ்வும் நலமும்

வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிட்டால் இத்தனை பக்கவிளைவுகளா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What are the side effects of eating cashews on an empty stomach?
Credit: IndiaMART

முந்திரியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவராக இருந்தால், இனியாவது கவனமாக இருங்கள். ஏனெனில், அது பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

சத்து நிறைந்த முந்திரி (Nutritious cashews)

முந்திரி (cashew) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளது, மேலும் வைட்டமின் ஈ அதிகளவில் இதில் நிறைந்துள்ளது.

வெறும் வயிற்சில் சாப்பிட்டால் (If eaten on an empty stomach)

ஆனால் சில உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், முந்திரியை அதிகளவு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். நீங்களும் அப்படிப்பட்டவராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்குதான். உடலுக்கு போஷாக்கு அளிப்பதாகக் கருதப்படும் முந்திரியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இத்தனை விளைவுகள் ஏற்படும். மக்களே உஷார்.

உயர் இரத்த அழுத்தம் (high blood pressure)

முந்திரி பருப்பில் (Cashew) சோடியம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில், சோடியம் அளவு அதிகரிப்பது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

வாயுத் தொல்லை (Gas harassment)

முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளது. இதனை அதிக அளவு மற்றும் வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவதால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படும்.

சிறுநீரக பிரச்சனை (Kidney problem

முந்திரியில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பது நோயை அதிகரிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், முந்திரியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 முந்திரி சாப்பிடுவதே உடல்நலத்திற்கு நல்லது.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

English Summary: What are the side effects of eating cashews on an empty stomach? Published on: 26 December 2021, 11:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.