1. வாழ்வும் நலமும்

அழகை கெடுக்கும் மரு எதனால் வருகிறது: தடுப்பதற்கான வழி என்ன?

R. Balakrishnan
R. Balakrishnan
Unslightly Warts

மரு என்பது நம் தோல் பகுதியில் காணப்படும் ஒரு அசாதாரணமான சிறிய வளர்ச்சி. பருக்கள் போல் முக அழகை கெடுக்கும் இந்த மருக்கள். பருக்கள் கூட ஒரிரு நாட்களில் மறையக் கூடும், ஆனால் மருக்களோ வளர்ந்து பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
மருக்கள் முகத்தில், கழுத்தில், உடலில் என எங்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாக தென்படும். பார்ப்பதற்கு மச்சம் போன்று சிறிய அளவில் தென்படும். இதனால் சருமத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. ஆனால் முகத்தின் அழகை கெடுத்துவிடும்.

மரு உருவாவதற்கான காரணங்கள் (Causes of warts)

மருக்கள் வருவதற்கு முக்கிய காரணம் ஹெச்.பி.வி. ஹியூமன் பாப்பிலோமோ வைரஸ் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது ஒரு காரணமாகும். ஆரோக்கியமற்ற சருமத்தில் இவை அதிகம் காணப்படும். அது மட்டுமில்லாமல் வயது முதிர்வு, தண்ணீரில் உப்புச்சத்து அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் கூட அவை வரலாம்.

குறிப்பாக சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது ஒரு அடிப்படை காரணம். அதிக நேரம் வியர்வையோடு இருப்பது, முறையான பராமரிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் மரு உருவாகும். முதலில் சிறிது அழுக்குப் போல் படிந்து அவற்றில் இருந்து மருக்கள் தோன்றும்.

மரு வரும் இடங்கள் (Locations of warts)

ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் மரு உண்டாகிறது. முக அழகை கெடுப்பது போல் மருக்கள் பெரும்பாலும் கண்களைச் சுற்றி வரக்கூடும். அது மட்டுமில்லமால் வியர்வை அதிகம் வரும் பகுதிகளான, கழுத்து, அக்குள் மற்றும் உடலில் மடிப்புகள் உள்ள பகுதிகளில் உருவாகும். இவை ஒரு இடத்தில் வந்தால் அதை சுற்றி உள்ள இடத்தில் பரவும் வாய்ப்புகள் அதிகம்

சிகிச்சை (Treatment)

பெருபாலும் சிலர் மருவை ஆரம்பத்தில் கண்டு கையால் பிடித்து இழுப்பார்கள். சிறு காயம் உண்டாகும். ஆனால் இவை பெரிதாகிவிட்டால் அதை நீக்குவது இது அவ்வளவு எளிது கிடையாது. அவற்றை இழுத்தால் வலி மட்டுமே மிஞ்சும். அதோடு அவை சருமத்தில் வேறுவிதமான பிரச்னையை உண்டாக்க கூடும். முடிகளை கட்டிக்கூட மருக்களை நீக்கலாம் என பெரியவர்கள் கூறுவர்.

நவீன காலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் அல்லது சரும மருத்துவர்கள் மூலம் 'காட்டரைசேஷன்' (Cauterization) என்ற சிகிச்சை மூலம் மருவை பாதுகாப்பாக நீக்க முடியும். இந்த சிகிச்சை மூலம் மருக்கள் மீது வலி தெரியாமல் இருக்கு கிரீம்களை தடவி, மருக்களை பொசுக்கி விடுவார்கள். பின் சருமத்தில் இருந்து அவற்றை நீக்குவார்கள். ஒரிரு நாட்களில் வலிகள் நீங்கி சருமம் பழைய நிலைக்கு வரக்கூடும்.

மரு வராமல் தடுக்க டிப்ஸ் : (Prevention)

  • தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். சருமத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
  • அழுக்கு சேரும் பகுதியில் ஸ்கரப்பர் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்.
  • மஞ்சள், கற்றாழை, அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகளை சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்
  • மருக்கள் இருப்பவர் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்றவற்றை பயன்படுத்தும் போதும் மருக்கள் பரவலாம். அதனால் அதை தவிருங்கள்
  • ஆனால் ஆரம்ப கட்ட மருவாக இருந்தால் இயற்கை மூலிகை வைத்தியம் கை கொடுக்கும். அதிகம் வளர்ந்துவிட்ட மருவுக்கு சரும பராமரிப்பு நிபுணர்களை அணுகுவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க

நெயில் பாலிஷ்: இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

முடி உதிர்வை மறைக்க அழகிய ஹேர்ஸ்டைல்!

English Summary: What causes unsightly warts: How to prevent them? Published on: 04 July 2022, 08:17 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.