1. வாழ்வும் நலமும்

ப்ரோஃபி என்றால் என்ன? உடலுக்கு சேதத்தை ஏற்படுத்துமா? அறிந்துகொள்வோம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
What Is Profee powder? How It Hepls?

தற்போது மக்கள், எப்போதுமே இல்லாத வகையில் புரதத்தை(protein) காபியில் சேர்க்கிறார்கள். இதற்கு ப்ரோஃபி என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போக்கு மக்கள் மத்தியில் நிலவுகிறது. காபியில் புரதம் சேர்ப்பது ஏன்? இது உடல்நலத்துக்கு நல்லதா அல்லது தீங்கானதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது.

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு காஃபியையோ அல்லது புரோட்டீன் உள்ள பானத்தையோ குடிப்பது பலருக்கு வழக்கமாக இருக்கும். அன்றாடம் காஃபியை விரும்பி பருகும் காஃபி விரும்பிகள் தன்னுடைய தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு ப்ரோட்டீன் பானங்களை அருந்த அறிவுறுத்தப்படுகிறது.  ஆனால் , இனி அந்த பிரச்சினை இருக்காது. ஒரே நேரத்தில் காஃபி மற்றும் புரோட்டீன் இரண்டையும் குடிக்கலாம். “ப்ரொஃபி “(Profee) என்பது ப்ரோட்டீன் மற்றும் காஃபி கலவை மட்டுமே. புரதச் சத்துக்களை எளிதில் பெறுவதற்கு இந்த வழி சிறந்தது என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே இது பிரபலமாகி வருகிறது.

காஃபியை தயாரிக்கும் போது அதில் புரோட்டீன் ஷேக்கை கலப்பதற்கு பதிலாக நேரடியாக புரோட்டீன் பவுடரையே சேர்க்கலாம்.  உதாரணமாக, நீங்கள் ப்ரோடீன் பவுடரை சூடான காபியை விட கோல்டு காபியுடன் கலந்தும் அருந்தலாம். ஒரு ஸ்பூன் ப்ரோடீன் பௌடரை கலக்கும் போது சுமார் 20 கிராம் ப்ரோடீன் உங்களுக்கு கிடைக்கிறது.  இதன் மூலம் நீங்கள் புரதச்சத்தை எளிதாக பெற்று கொள்ள முடியும்.  உயிரணுக்களின் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வகுக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கிலோ எடைக்கு 0.8 கிராம் புரதம் அவசியமானது. நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது மற்றும் வலுவான தசைகளை பெறவிரும்பினால்  அதன் தேவை அதிகரிக்கிறது. மறுபுறம் ப்ரோஃபி உடற்பயிற்சியின் போது அதிக வலிமையை உண்டாக்கும்.

ப்ரோஃபியை(Profee) உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக்கொள்வது தசைகளுக்கு தேவையான சக்தியை வழங்குவதோடு, கடுமையான உடற்பயிற்சியிலிருந்து விரைவாக மீளவும் உதவி செய்யும். எனவே, காலை உணவை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், ப்ரோஃபி எடுத்து கொள்வது மதியம் வரை அவர்களுக்கு முழுமையான சக்தியை வழங்க உதவும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும், கலோரி உட்கொள்ளலைக் குறைக்க புரத காபி(Profee) பயனுள்ளதாக இருக்கக்கூடும்.  இருப்பினும், புரதம் மற்றும் காஃபின் இரண்டையும் ஒரு அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அளவை தாண்டி உட்கொள்ளும் போது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் ப்ரோடீன் காபியை(Profee) உட்கொள்ளாமல், நேரடியாக நமக்கு தினம்தோறும் கிடைக்கும் முட்டை, ஓட்மீல், குயினோவா ஆகியவைகளில் இருந்து புரதத்தை எடுப்பதே சிறந்தது.மேலே கூறிய பொருள்களில் அதிக அளவு புரதச்சத்துக்கள் இருப்பதோடு இவை உங்களின் உடலுக்கு மற்ற சத்துக்களை வழங்கவும் உதவக்கூடும். உங்கள் உடல்நலத்தை பேணிக்காக்க இயற்கை முறையை பின்பற்றவேண்டும்.  இந்த புரோட்டீன் காபியை குடிக்க விரும்பினால் 'ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் படிக்க:

காளான் காபி: சர்க்கரையை சமநிலைப்படுத்த காளான் காபி!

விலையேற்றத்தால் கசக்கிறது இனிக்கும் காபி!

English Summary: What is a profee? Does it cause damage to the body? Let's find out! Published on: 05 October 2021, 12:57 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.