1. தோட்டக்கலை

வாருங்கள் விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களை உருவாக்குவோம்

KJ Staff
KJ Staff
Planting Seeds

பண்டை தமிழர்களின் வாழ்வும், நலமும் இயற்கையோடு ஒன்றி இருந்தது. வாழ்க்கை முறையும், உணவு முறையும் பருவ நிலைக்கேற்ப அமைந்திருந்தது. நம் தமிழர்கள் தமிழ் மதங்களை அடிப்படையாக கொண்டு  பண்டிகைகளும், திருவிழாக்களும் வகுத்தனர்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. குறிப்பாக ஆடி  மாதம் என்றால் சொல்லவே வேண்டும். ஆன்மிக ரீதியாகவும், விவசாயத்திற்கு ஏற்ற மாதமாகவும் கூறப்படுகிறது. நம்பிக்கை சார்ந்த செயலக அல்லாது அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது. இதன் பின்னால் ஒளிந்துள்ளது.

ஆடி மாத பழமொழி     

மாதங்களில் அதிக அளவிலான பழமொழிகளை கொண்ட மாதம் இதுவே ஆகும். இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ உங்களுக்காக

  • ஆடி பட்டம் தேடி விதை
  • ஆடி காற்றில் அம்மையே பறக்கும்
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்
  • ஆடி செவ்வாய் தேடி குளி அரைச்சமஞ்சள் பூசிக்குளி
  • ஆடிக்கூழ் அமிர்தமாகும்
  • ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிபிடி
  • ஆடித்தேரை தேடி தரிசி
  • ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடி
  • ஆடி வரிசை தேடி வரும்

 இவ்வனைத்து பழமொழிக்கும் ஒரு பொருளுண்டு.

Stages of Growing Seed

ஆடி பட்டம் தேடி விதை

ஒரு விதையானது எப்பொழுது முழுமையான பலனை, அல்லது அதிக மகசூலை தரும் என்று தெரியுமா? நாம் விதைக்கும் எல்லா விதைகளும் விருட்சங்களாகுமா என்று தெரியாது.  ஆனால் நாம் சரியான காலத்தில், சரியான நேரத்தில், நேர்த்தியான விதைகளை விதைக்கும் போது முழுமையாக வளர்ச்சியடைந்து அபிரிவிதமான பலனை தரும்.

ஆடி மாதம் என்பது தட்சிணாயனம் (தென்திசையேகல்) ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரியன் தென்கிழக்கு திசை நோக்கி நகரும். தை முதல் ஆனி வரை உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியன்  வடகிழக்கு நோக்கி நகரும். ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.

Tomato Plant

ஆடிப்பட்டம் தேடி விதை’ என குறை காரணம், தென்மேற்குப் பருவமழை பொழியும்  மாதங்கள் ஆனி, ஆடி, ஆவணி போன்ற மாதங்கள். இத்தகைய ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நன்கு வளரும். அதுமட்டுமல்லாது  விதைகளை விதைப்பதற்கு உகந்த மாதமாக ஆடி மாதமே  கருத படுகிறது. அதிலும் ஆடி 18 - ஆம் நாள் விதைக்கப்படும் விதைகள் அதிக மகசூலை தரும் என்ற நம்பிக்கை உண்டு. எனவே விவசாகிகள் ஆடி மாத தொடக்கத்தில் விதைகள், விதை நிலங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். ஆடி 18 ஆம் நாள் விதைப்பார்கள். இன்றும் இந்த வழக்கம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.   

பயிர்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் பயிரிடுவார்கள். ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படும் விதைகள் குறைவான பராமரிப்பிலேயே அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது மற்றொரு சிறப்பு. ஆடிப்பட்டத்துல்  நிலக்கடலை, பயிறு வகைகள்,  காய்கறிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, அவரை  என பலவற்றை சாகுபடி செய்யலாம்.

இன்று விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு தோட்டங்களில் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் விதைப்பதை நாம் பார்க்கிறோம். இதுவரை விதைக்காதவர்கள் இனியேனும் விதையுங்கள்... நாம் இன்று விதைக்கும் விதை அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... மாற்றம் நம்மில் இருந்து வரட்டும்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Features Of AAdi Month: It Is Time To Remember Our Tamil Tradition and Their Methods of Planting

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.