1. தோட்டக்கலை

நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்களில் மிகவும் இன்றியமையாதது ஒருங்கிணைந்த ஊட்டச்சுத்து மேலாண்மை. குறிப்பாக நெல் சாகுபடியைப் பொருத்தவரை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் அவசியமான ஒன்று.

மண் பரிசோதனை (Soil testing)

எனவே பயிரிட ஆரம்பிக்கும்போது, மண் பரிசோதனை செய்து, மண்வள அட்டை பெற்று அதன்படி உரமிடுதல் அவசியம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை செய்திடுதல் அவசியம். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் வேண்டும்.

இயற்கை உரங்களின் நன்மைகள் (Benefits of natural fertilizers)

  • தேவைக்கு அதிகமாக உரமிடுதல் தவிர்க்கப்படுகிறது.

  • உரம் இடுவதற்கான செலவு குறைகிறது.

  • மண்ணின் வளம் அதிகரிக்க வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

  • மண்ணின் நீர் பிடிப்புத்தன்மை மேம்படுகிறது

  • காற்றோட்டம் அதிகரிக்கிறது.

  • உரச்சத்து பிடிப்புத்தன்மை உயர்கிறது.

  • பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.

  • மண்அரிப்பு ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுப் படிப்படியாகக் குறைகிறது.

  • இயற்கை உரங்கள் மக்கும்போது வெளிவரும் அமிலங்கள் மண்ணில் உள்ள மணிச்சத்து மற்றும் நுண்ணுட்டச் சத்துக்களைக் கரைத்து பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.

  • இது, மண்ணில் உள்ள பயிர்களை பாதிக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்துகிறது.

  • பூச்சி, நோய் தாக்குதல் குறைகிறது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பெற (To get integrated nutrition)

தொழுஉரம் ஒரு ஏக்கருக்கு 5 மெ.டன் அல்லது பசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 2.6 மெ.டன் அல்லது கரும்பாலை கழிவு அல்லது மக்கி தென்னை நார்கழிவு ஒரு ஏக்கருக்கு 2.6 மெ.டன் அடியுரமாக நடுவதற்கு 10 நாடகளுக்கு முன்பாக இடுவது நல்லது.

அசோஸ்பைரில்லம் 4 பாக்கெட், பாஸ்போபாக்டீரியா 4 பாக் கெட் 1 ஏக்கருக்கு தொழுஉரத்துடன் கலந்து நடுவதற்கு முன்பாக இட வேண்டும். சூடோமோனாஸ் 1 கிலோவினை 2 கிலோ தொழுக ஏம் மற்றும் 10 கிலோ மணனுடன் கலந்து நடுவதற்கு முன் இடவும். நீலப் பச்சைப்பாசி ஒரு ஏக்கருக்கு 4 கிலோ பயன்டுத்தி,10 நாட்களுக்கு பின் இட்டு வயலில் நீர் பாய்ச்சிப் பராமரித்தல் அவசியம்.

மேலும் படிக்க...

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற அழைப்பு!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

English Summary: Integrated Nutrition Management in Paddy Cultivation! Published on: 20 September 2021, 10:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.