1. தோட்டக்கலை

விவசாயிகள் அங்ககச்சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Farmers are invited to apply for Certificate!
Credit : IndiaMART

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என விதைச் சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மகத்தான விவசாயம் (Massive agriculture)

மண்ணை உயிரோட்டம் உள்ளதாக மாற்றி, மண்ணும், மனிதர்களும் கேடு விளைக்காத, சத்துள்ள உணவை அளிக்க வேண்டும் என விரும்பும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்கள் இலக்கை அடைய வேண்டுமானால், அங்ககச் சான்று பெற வேண்டியது மிக மிக அவசியம்.

ஆகவே இயற்கை விவசாயம் செய்யும் அனைவரும் இந்த சான்று பெறும்போது, அவர்களின் உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனிநபராக விண்ணப்பிக்கலாம் (Apply individually)

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர், அங்ககச் சான்று வற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

  • இதேபோல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்கக விளை வாருட்களை பதன் செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களது பண்ணையின் பொது விவா குறிப்பு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், நில ஆவணம் மற்றும் நிரந்தர கணக்கு எண், ஆதார் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் படிக்க...

சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!

English Summary: Farmers are invited to apply for Certificate! Published on: 09 February 2021, 03:34 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.