1. தோட்டக்கலை

தக தக தக்காளி சாகுபடி- பூச்சியைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்துகள் எவை?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tomato Cultivation- What are the natural remedies for pest control?

Credit : Bonnie Plant

சமையலுக்குப் பயன்படும் முக்கியமான ஒன்று என்றால் அது தக்காளிதான். ஆனால், தக்காளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாட்டை சமாளிப்பது என்பது சற்று சவால் மிகுந்தது.

அதிலும், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும்போது, இதனை சமாளிக்க எவ்வகைக் கரைசல்களைப் பயன்படுத்த வேண்டும் என இப்போது பார்ப்போம்.

கட்டுப்படுத்த எளிய வழிகள் (Simple ways to control)

  • சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளைச் செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம்.

  • 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது.

  • பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம். அல்லது மோர் கரைசல் அடிக்கலாம்.

  • செண்டுமல்லி செடியை தக்காளி தோட்டத்தைச் சுற்றி நட்டால் நூற்புழு தாக்குதல் கட்டுப்படும்.

  • காய் துளைப்பானைத் தடுக்க, பூண்டு அல்லது வெங்காய செடியை வரப்பு பயிராக நடவு செய்தல் வேண்டும்.

  • வேப்பம் புண்ணாக்கு உடன் ஆட்டுப் புழுக்கையை கலந்து வயலில் இட்டால் இலைப்பேன் தாக்கம் கட்டுப்படும்.

  • காலை வேளையில் சாம்பலைத் தக்காளிச் செடிக்குத் தூவினால் இலைப்பேன் மற்றும் அசுவினி தாக்குதல் கட்டுபடுத்த சர்வோதய சோப் கரைசலை இலைகளின் மீது தெளித்தால், மாவுப் பூச்சியின் முட்டை மீது படிந்து இறந்து விடும்.

கற்பூர கரைசல் /காய் சிறிது வந்தவுடன் ஒரு டேங்குக்கு 30 எம்எல் என்ற அளவில் கலந்து செடி நனையுமாறு நன்கு அடிக்க வேண்டும்.

தகவல்
சரவணன்
தக்காளி விவசாயி

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் - விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!

விவசாயிகளின் குறையை தீர்க்க ஆவண செய்யப்படும்! - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Crop loan waiver: பயிர்கடன் தள்ளுபடி எதிரொலி : கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் விவரங்கள் சேகரிப்பு!!

English Summary: Tomato Cultivation- What are the natural remedies for pest control?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.