1. தோட்டக்கலை

பட்டாணி சாகுபடி

KJ Staff
KJ Staff

இரகங்கள்:  

போனிவில்லி, புளுபேண்டம், அர்கெல், அலாஸ்கா லின்கோலின், அசாத்.

ண் மற்றும் தட்பவெப்பநிலை: பட்டாணி மணல் சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் வளராது (6-7.5).

பட்டாணி பயிரானது குளிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியும் மகசூலும் தரவல்லது.

பருவம்

பிப்ரவரி - மார்ச், அக்டோபர் - நவம்பர்

விதை அளவு

எக்டருக்கு 100 கிலோ

இடைவெளி

40 x 10 செ. மீ

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு தடவை மடக்கி உழவும், கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவேண்டும். பின்பு 45 செ. மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைகளை விதைப்பதற்கு முன்னர், ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது நான்கு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். பின்பு இரண்டு கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மண்ணுடன் கலக்கவேண்டும்.

விதைப்பு: பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 செ. மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கு விதை 10 செ. மீ இடைவெளி விட்டு விதையை ஊன்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

பார்களின் ஓரங்களில் தழைச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 70 கிலோ கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் மூன்று நாட்கள் கழிது்த உயிர்த்தண்ணீர் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மையை அனுசரித்து 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டவேண்டும். மலைகளில் பயிரிட்டால் பனிக்கட்டி தோன்றும் காலத்தில் நீர் கட்டவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

விதைத்த 15 நாட்களுக்குப் பின்னர் ஒரு களை எடுக்க வேண்டும். பின்னர் தேவைப்படும்போது களைக்கொத்தி கொண்டு களை எடுக்க வேண்டும். விதைத்த 30வது நாளில் 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை மேலுரமாக இடவேண்டும்.

 

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய் துளைப்பான்

பதினைந்து நாட்கொருமுறை ஒரு லிட்டருக்கு 12 கிராம் கார்பரைல் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

அசுவினி: மெத்தைல் டெமட்டான் (அ) டைமெத்தோயேட் (அ) பாஸ்போமிடான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதைத்த 75 நாட்கள் கறிப்பட்டாணியை அறுவடை செய்யலாம். பட்டாணிப் பயிரில் காய்கள் தகுந்தபடி முற்றியதும் அறுவடையை ஆரம்பிக்க வேண்டும். காய்கறிப் பருவம் அதாவது உண்ணும் பருவத்தைக் கடந்துவிட்டால் காய்களின் தரம் குறைந்துவிடும். அறவடையின் போது அதிக வெப்பம் இருந்தாலும் தரம் குறைந்துவிடும். மூன்று முறை பட்டாணியை அறுவடை செய்யலாம். அறுவடையை காலையிலோ அல்லது முற்பகலிலோ செய்யவேண்டும்.

மகசூல்: ஒரு எக்டருக்கு 110 நாட்களில் 8 முதல் 12 டன்கள்.

 

English Summary: Green Peas Cultivation methods

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.