1. தோட்டக்கலை

தர்பூசணி சாகுபடி

KJ Staff
KJ Staff

இரகங்கள்

நியூ ஹாம்ஷ்யர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹஜயமாடோ,பெரிய குளம் 1, அர்கா, மானிக், அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா மற்றும் கேசர், அர்கா ஜோதி, பூசா பேதனா, அம்ருத்.

பிகேஎம் 1:

பழங்கள் பெரிதாகவும், அடர் பச்சை நிறம் கொண்டதாகவும், உள்ளே சதைப் பகுதி இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கும். மகசூல் எக்டருக்கு 122-135 நாட்களில் 36-38 டன் ஆகும்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

மணல் கலந்து இருமண்பாட்டு நலம் மிகவும் உகந்தது. அதிக வெப்பத்துடன் காற்றில் ஈரத்தன்மை நல்ல சூரிய வெளிச்சத்துடனும் உள்ள தட்பவெப்பநிலை பயிர் செய்ய ஏற்றது. குறைந்த வெப்பநிலையில் விதைகள் முளைப்பது குறைவாக இருக்கும். காய்கள் முதிர்ச்சி அடையும் பருவத்தில் அதிக வெப்பநிலை நிலவுவது பழங்களில் இனிப்புத் தன்மையை அதிகரிக்கும். பனி பெய்தால் பயிரின் வளர்ச்சி தடைப்படும்.

பருவம்

ஜனவரி - பிப்ரவரி  மாதங்களில் விதைக்கப்படும் பயிர் கோடைக்காலத்தில் அறவடை செய்யப்படும் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதைத் தவிர ஜீன் - ஜீலை மாதங்களிலும் விதைப்பு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 முறை நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரமிட்டு மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலமுள்ள வாய்க்கால்கள் அமைத்திடவேண்டும். இந்த வாய்க்கால்களின் உட்புறம் 1 மீட்டர் இடைவெளியில் 45x45x45 செ.மீ நீள, அகல, ஆழ அளவில் குழுிகள் தோண்டவேண்டும். இக்குழிகளில் சம அளவு மேல் மண் மற்றும தொழு உரம் ஆகியவற்றுடன் இராசயன் உரங்களைக் கலந்து இடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

எக்டருக்கு தேவையான இராசயன உரங்கள்

பயிர்

ஒரு எக்டருக்கு சத்துக்கள் (கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

தர்பூசணி

30

65

85

250

11

33

             

குழி ஒன்றுக்கு 13 கிராம் யூரியா, 80 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 30 கிராம் மியுரேட் ஆஃப் பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.

உரப்பாசனம்
தர்பூசணி மற்றும் முழாம்பழத்திற்கு ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 200:100:100 கிகி. இந்த அளவை பிரித்து பயிரின் காலம் முழுவதும் அளிக்க வேண்டும். 

 விதையும் விதைப்பும்

ஒரு எக்டருக்கு விதைக்க சுமார் 3 - 4  கிலோ அளவு விதை தேவை. குழி ஒன்றுக்கு 4 -5 விதைகளை பின்னர் முளைத்து வந்தவுடன் குழிக்கு 3 செடிகள் இருக்குமாறு கலைத்துவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

பருவமழைக் காலங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யலாம். கோடைக் காலத்திற்கு அறுவடை செய்யப்படும், பயிரை பாசனப் பயிராகப் பயிர் செய்யலாம். மானாவாரியில் மழை வந்தவுடன் குழிகள் தோண்டி விதைப்பு செய்யவேண்டும். இறவையில் விதைப்பதற்கு முன்னர் குழிகளில் நீர் ஊற்றிப் பின்னர் 7 -10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் ஊற்றவேண்டும். விதைகள் முளைத்துவந்த பின்னரே வாய்க்கால்கள் மூலம் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நீர் பாய்ச்சுதல் ஒரே சீரான இடைவெளியில் செய்யவேண்டும். (சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை) அதிக நாட்கள் நீர் பாய்ச்சாமல் மண்ணின் ஈரத்தன்மை மிகக் குறைவான நிலைக்குப் போன பின்னர் திடீரென்று நீர் பாய்ச்சினால் காய்கள் வெடித்துவிடும். இவ்வாறு வெடித்த காய்கள் விற்பனையில் விலை குறைந்து போக ஏதுவாகும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாட்களில் களைக்கொத்து கொண்டு கொத்திக் களை நீக்கும் செய்யவேண்டும். விதைத்த 15 ஆம் நாள் (பயிர் 2 இலைகளுடன் இருக்கும்போது) டிபா என்ற பயிர் ஊக்கியை 25.50 பி.பி.எம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்கவேண்டும். (25-50 மி.கிராம் / ஒரு லிட்டர் / தண்ணீருக்கு அல்லது 250 மி. கிராம், 500 மி.கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலக்கவேண்டும்) மீண்டும் ஒரு வாரம் கழித்து இதே அளவில் கலந்து ஒரு முறை தெளிக்கவேண்டும்.

இதற்கு பதிலாக எத்ரல்  பயிர் ஊக்கியை கீழ்க்கண்ட தருணத்தில் 4 முறை தெளிக்கலாம். (2 மி.லி மருந்து 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து)

  • முதல் இரண்டு  இலைப்பருவம்
  • ஒரு வாரம் கழித்து
  • மேலுரம் ஒரு வாரம் கழித்து
  • மீண்டும் ஒரு வாரம் கழித்து என 4 முறை தெளிக்கவேண்டும்

கொடிகள் படர ஆரம்பித்தவுடன் வாய்க்கால்களிலிருந்து எடுத்து இடைப்பகுதியில் படரச் செய்யவேண்டும். விதைத்த 30 ஆம் நாள் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும். இதற்கு குழி ஒன்றிற்கு 13 கிராம் யூரியா இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வண்டுகள்: வண்டுகளைக் கட்டுப்படுத்த நனையும் செவின் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தை 1 லிட்டர் தண்ணீரை 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
பழ ஈக்கள் : இதனைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தினை உபயோகப்படுத்தலாம்.

அறுவடை

பழங்கள் முற்றி பழுத்தவுடன் அறுவடை செய்யவேண்டும்.

அறுவடைக்கான அறிகுறி

  • நன்கு முற்றிப் பழுத்த பழத்தை விரலால்  தட்டிப் பார்க்கும் போது ஒரு மந்தமான  ஒளி உண்டாகும்.
  • பழத்தில் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பசுமை நிறம் மாறி மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் நிறமடையும்.
  • கொடியில் பழத்தின் அருகிலுள்ள பற்றிய படரம் கம்பிச்சுருள் காய்ந்து விடும்.
  • பழங்களைக் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கும்போது அப்பகுதி எளிதில் உடைந்து நொருங்கும்.
  • சாதாரணமாக மலர் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடந்து சுமார் 30 - 40 நாட்களில்  பழங்கள் அறுவடைக்குத் தயாராகும்.

 மகசூல் : 36-38  டன்கள் / எக்டருக்கு

 

 

English Summary: Watermelon Cultivation

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.