1. தோட்டக்கலை

அங்கக வேளாண்மை முறையில் பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை வழிகள்

KJ Staff
KJ Staff
seeds

அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும். நோய்க்காரணிகள் மண்ணில் தங்கியோ அல்லது விதைகள், விதைக்கரணைகள் மூலமாகவோ அல்லது காற்று, மழைநீர் மூலமோ அல்லது வைரஸ் (நச்சுயிரி) நோய்கள் பூச்சிகளின் மூலமோ பரவுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பல யுத்திகளைப் பயன்படுத்தி சிறந்த நோய்க்கட்டுப்பாட்டினை அடைந்திடலாம்.   

விதை மூலம் பரவும் நோய்கள்

நோய் தாக்கப்படாத வயல்களிலிருந்து விதை கரணைகள், விதைக்கிழங்குகள் முதலியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக கிழங்குகளின் மூலம் பரவும் நச்சுயிரி நோய்கள் விதை மூலம் பரவும் கரிப்பூட்டை, இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்கள் நச்சுயிரி நோய்கள் விதையின் மேற்புறத்தில் தங்கிப்பரவும் பாக்டீரியா நோய்களின் கட்டுப்பாட்டை எளிதில் பெறலாம்.

கட்டுப்படுத்தும் முறை

* கோதுமை விதைகளை நான்கு மணி நேரம் குளிர் நீரில் ஊறவைத்து, மதிய வேளையில் சூரிய ஒளியில் நான்கு மணி நேரம் காய வைக்கும் பொழுது விதையிலுள்ள கரிப்பூட்டைக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

* தக்காளி விதைகளை நொதித்தலுக்கு உட்படுத்தும் பொழுது, வெளிவரும் வாயுக்களை தக்காளியின் மேற்பரப்பில் உள்ள புகையிலைத் தேமல் நச்சுயிரியை அழிக்கின்றன.

* தக்காளி புள்ளி வாடல் நச்சுயிரி நோயானது நட்ட ஆறு வாரங்கள் வரை நோய் தாக்கிய செடிகளை அகற்றுவதன் மூலம் கட்டுப்படுகிறது.

* வைரஸ் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அப்புறப்படுத்தும் பொழுது, நச்சுயிரி நோய்கள் மேலும் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

* சில விவசாயிகள் கால்நடைகளின் சிறுநீரில் விதைகளை ஊறவைத்து நடுவதால் முளைப்புத்திறன் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.

* கம்பு, சோளப்பயிர்களில் ஏற்படும் தேன் ஒழுகல் நோயைக் கட்டுப்படுத்த, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் (அதிக மழை வரும் நேரங்களில்) பூக்காத படி விதைத்தால் நோய் கட்டுப்பாடு கிடைக்கும்.

* வரப்புப் பயிராக கம்பு, சோளம் போன்றவற்றை பப்பாளி, உளுந்து, பாசிப்பயிறு,   நிலக்கடலையை சுற்றிலும் பயிரிடும் பொழுது மஞ்சள் தேமல், பப்பாளி வளையப் புள்ளி, வைரஸ் நச்சுயிரி, நிலக்கடலை மொட்டுக்கருகல் நோய் கட்டுப்பாடு கிடைக்கிறது.

இலை வழிகளின் நோய் கட்டுப்பாடு

disease management

* வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளிப்பதால் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

* 110 மி.லி. மாட்டு சிறுநீர், 5 கிராம் பெருங்காயப்பொடி, 11 கிராம் மஞ்சள் தூள், 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 12 மணி நேரம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பின்னர் நாற்றுக்களின் வேர்களை நனைத்து நடவு செய்யும் பொழுது நோய் தாக்கம் குறைகிறது.

* பூண்டு  – மிளகாய் கரைசல் 11 சதவீதம் தெளிப்பதன் மூலம் பீன்ஸ் பட்டாணியில் ஏற்படும் அசுவினியைக் கட்டுப்படுத்தி நச்சுயிரி தாக்கத்தை குறைக்கிறது.

* பஞசகவ்யா 3 சதவீதம் 11 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் இலைப்புள்ளி மேல் சாம்பல் நோய் தாக்கம் குறைகிறது.

உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகள்

உயிரியல் முறையில் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் போன்றவை அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உபயோகிக்கும் முறை

விதை நேர்த்தி : 1 கிலோ விதைக்கு 11 கிராம் என்ற அளவில்.

நாற்று நனைத்தல்: 2.5 கிலோ/ எக்டருக்கு தேவையான நாற்று

வயலில் இடுதல்: ஒரு எக்டருக்கு 2.5 சதம் 2.5 கிலோ + 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு

தெளிப்பு முறை: 0.2 சதம் (2 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்)

டிரைகோடெர்மாவிரிடி

* விதை நேர்த்தி: 4 கிலோ டிரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

*  விதை நேர்த்தியால் கட்டுப்படும் நோய்கள்: பயிர் வகைகள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி இவற்றில் உண்டாகும் வேரழுகல் மற்றும் வாடாமல் நோய்கள், காய்கறி பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் மற்றும் வேரழுகல் கட்டுப்படும்.

* மண்ணில் இடுதல்: 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உடன் 50 கிலோ மக்கிய குப்பை அல்லது எருவுடன் கலந்து மண்ணில் இடுவதால் மஞ்சள் கிழங்கு அழுகல் நோய் போன்ற மண்ணின் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு கிடைக்கிறது.

https://tamil.krishijagran.com/horticulture/seed-technology-seed-treatment-benefits-and-types-of-seed-treatments/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: How To Control Pest and improve Disease Management: Here are some Organic ideas for crop protection Published on: 28 August 2019, 04:53 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.