1. தோட்டக்கலை

செடிகளில் கச்சிதமாகக் கவாத்து செய்வது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to make a perfect pruning on plants?

செடியானாலும் சரி, முடியானாலும் சரி,இங்கு வளர்ச்சி சீரானதாகவும், முறையாகவும் இருக்க வேண்டும். அவ்வாறுச் செடிகளைப் பொருத்தவரை, சீரான வளர்ச்சிக்கு வித்திடுவது, கவாத்து.கவாத்து என்பது பக்க கிளைகளைவெட்டி ஒழுங்கு படுத்தும் முறையாகும். மரம் செடிகளுக்கு தேவையான பின் செய் நேர்த்தி முறையே, கவாத்து என்பதாகும்.

நாம் எப்படி அதிக அளவில் வளர்ந்த தலைமுடியை வெட்டி, ஒரே சீராக வளர்க்கிறோமோ, அதேபோல, கவாத்து செய்வதன் மூலம் புத்தம் புதியக் கிளைகள்,பூக்கள், மொட்டுகள் உள்ளிட்டவை துளிர்க்க முடியும்.
இதனால் அதிக அளவில் பூக்களும் கனிகளும் உருவாக்க முடியும். கூடுதலாக மகசூல் கிடைத்து வருவாய் அதிக மாகும் வாய்ப்பும் பிரகாசமாகிறது.

எப்போது செய்வது?

பூக்கும் தருணத்திற்கு முன்பாக கவாத்து செய்ய வேண்டும்.

தாவர வகைகள்

மா,கொய்யா,மாதுளை, தேயிலை மற்றும் மல்லிகைசெடி போன்றவற்றில் முறையாக கவாத்து செய்தல் அவசியம். அதேபோல, அழகு செடிகள் மற்றும் பழமரங்களுக்கும் கவாத்து அவசியமாகிறது.

கவாத்தின் நன்மைகள்

  • கவாத்து செய்வதன் மூலம் தேவையில்லாத கிளைகள், கொப்புகள் காய்ந்துபோன கிளைகள் ஆகியவை முறையாக அகற்றப்படுகின்றன.

  • அவ்வாறு அகற்றுவதன் முலம் முழு ஊட்டச்சத்துகள் வீணாக்காமல் மரங்களுக்கு கிடைக்கும்.

  • காற்றோட்டமாக இருப்பதுடன் செடிக்கு சூரிய ஒளி வசதியும் கிடைக்கும்.

  • கவாத்து செய்ய பட்ட இலை, தளை களை மக்க வைத்து உரமாக்க வாய்ப்பாக இருக்கும்.

  • கவாத்து செய்வதன் மூலமாக புதிய இலை தளிர் உண்டாகி, புதிய பூ மொட்டுகள் உருவாக்க முடியும்.

  • கவாத்து செய்ய கத்திரிகோல் பயன்படுத்த வேண்டும். அரிவாள் கொண்டு வெட்டக் கூடாது.

இதனைக் கொண்டு மரங்களை வெட்டும்போது பிசிறு பிசிறாகக் காணப்பட்டால் நோய் தொற்று உருவாகும்.எனவே குறிப்பிட்ட காலத்தில் கவாத்து செய்து அதிக அளவாக விளைச்சல் பெறலாம்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

English Summary: How to make a perfect pruning on plants? Published on: 04 May 2022, 11:02 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.