1. தோட்டக்கலை

பட்டுப்புழு வளர்ப்புக்கு ரூ.90,000 வரை மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidy for silkworm rearing! Opportunity for Indigenous Farmers

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்பு தொழில் ஈடுபட ஆர்வமுள்ள, பழங்குடியினருக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டு பாரம்பரியம் (Silk tradition)

பெண்களில் ஆடைகளில் எப்போதுமே பட்டுக்குத் தனி இடம் உண்டு. அணிந்து வந்தாலே மதிப்பும், மரியாதையும் கூடிவிடும். எதிரில் வருபவரை, ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கத் தூண்டுவதில் பட்டுப்புடவை முக்கியமானது.

தமிழகத்தில், வெண்பட்டு மற்றும் மஞ்சள் நிற பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆமணக்கு இலைகளை, உணவாக உட்கொண்டு வளரும், 'ஈரி' வகை பட்டுப்புழு வளர்ப்பு குறைவாகவே உள்ளது.

விழிப்புணர்வு தேவை (Awareness is needed)

வடமாநிலங்களில், மலைத்தொடர்களிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள பகுதிகள் இவ்வகை பட்டுக்கூடுகள் உற்பத்தி அதிகளவில் உள்ளது.
ஈரி வகை பட்டுப்புழு வளர்ப்பு தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மலைவாழ் கிராம மக்களுக்கு, வருவாய் கிடைக்க, தமிழக அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்தொழிலில், ஈடுபட ஆர்வமுள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு, பல்வேறு மானியங்கள் பட்டு வளர்ச்சித்துறையால் வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் அரை ஏக்கரில், இணை வரிசை முறையில், ஆமணக்கு சாகுபடி செய்திருக்க வேண்டும். புழு வளர்ப்பு மனை, 500 சதுர அடிக்கு மேல் இருக்க வேண்டும். இதில், விவசாயிகளுக்கு, மொத்த மதிப்பான, ஒரு லட்சம் ரூபாயில், 90 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பம்

  • ஆமணக்கு தோட்டம்

  • புழு வளர்ப்பு மனை

  • கட்டடத்தின் தரை மட்ட நிலை

  • லிண்டல் நிலை

  • முழு நிலை

  • ஆகியவற்றின் உட்புற, வெளிப்புற போட்டோ

  • இ-அடங்கல்

  • ஆதார் அட்டை நகல்

  • வங்கிக்கணக்கு புத்தக நகல்

  • ஜாதிச்சான்றிதழ்

  • பதிவு பெற்ற கட்டட பொறியாளரின் மதிப்பீட்டு சான்றிதழ்

  • கட்டட வரைபடம் ரூ.100 மதிப்பிலான பிணைய பத்திரம்

விண்ணப்பம்

ஆர்வமுள்ள பழங்குடியின விவசாயிகள், மேலே கூறியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

தகவல்
பட்டு வளர்ச்சித்துறையினர்

மேலும் படிக்க...

இயற்கை விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்!

சூரிய ஒளி மின்வேலி அமைக்க 40% மானியம்!

English Summary: Subsidy for silkworm rearing! Opportunity for Indigenous Farmers Published on: 01 December 2021, 10:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.