1. தோட்டக்கலை

போலியாக உர பற்றாக்குறையை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
License revoked if fake fertilizer shortage occurs: Warning to sellers!
Credit : Fertilizer Machine

கூடுதல் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில், செயற்கையாக உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதுக் கண்டுபிடிக்கப்பட்டால், உர நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மானாவாரி சாகுபடி (Rainfed cultivation)

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மானாவாரி விதைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விவசாயிகளுக்குத் தேவையான உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் போதிய அளவிற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கையொப்பம் (Signature)

உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு ஆதார் அட்டையுடன், சாகுபடி பரப்பிற்கு தகுந்த அளவு மட்டுமே உரம் விநியோகம் செய்யுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், உர விற்பனை யாளர்கள் விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் பெற்று செல்லும் விவசாயிகளிடம் உரியக் கையொப்பம் பெறுவது கட்டாயம்.

செய்யக்கூடாதவை (Do's and Don'ts)

மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு, போலியாக உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தவோ, இரசீது இல்லாமல் உரம் விற்பனை செய்யவோ, அரசால் நிர்ணயிக்கப்பட்ட உர விற்பனை விலையினை விட அதிவு விற்பனை விலைக்கு விற்பனை செய்யவோக் கூடாது.

உரிமம் ரத்து (License revoked)

அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி உர உரிமம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும்.
அதேநேரத்தில் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனி நபர் மூலமாகவோ வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்க வேண்டாம்.

போலிகளுக்கு வாய்ப்பு (Opportunity for fakes)

அவ்வாறு பெறப்படும் உரங்கள் போலியாக இருக்க வாய்ப்பு இருப்பதால், இது குறித்து அருகிலுள்ள வேளாண் அலுவலகங்களில் விசாரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற அழைப்பு!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

English Summary: License revoked if fake fertilizer shortage occurs: Warning to sellers! Published on: 21 September 2021, 07:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.