Krishi Jagran Tamil
Menu Close Menu

PM-KISAN Scheme: 7-வது தவணை விரைவில், ரூ.6,000 பெற யார் தகுதியற்றவர்கள்? விவரம் உள்ளே!!

Friday, 13 November 2020 04:18 PM , by: Daisy Rose Mary

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Kisan Samman) Nidhiஅடுத்த தவனை டிசம்பர் மாதத்தில் வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நீங்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால் சில வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நிலை குறித்து அறியலாம்.

பி.எம் கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாக கொண்டு கடந்த 2019 இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலம் உள்ள அணைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

PM-KISAN திட்டத்தில் இணைய யார் தகுதியற்றவர்கள்?

⦁ அணைத்து நிறுவன நில உரிமையாளர்கள்

⦁ அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள்

⦁ சேவை செய்யும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள்

⦁ மாநில அல்லது மத்திய அரசின் ஊழியர்கள்

⦁ பொதுத்துறை மற்றும் அரசு தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள்

⦁ டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் வக்கீல்கள் போன்ற தொழில் வல்லுநர்கள்

⦁ மாதந்தோறும் ரூ .10,000 க்கு மேல் ஓய்வூதியம் ஓய்வூதியம் பெறுவோர்

⦁ கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள்

நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டீர்களா?

பி.எம் கிசான் திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால் கிழே வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பெயர் மற்றும் உங்களின் நிலை குறித்து அறிய முடியும்.

 • முதலில் pmkisan.gov.in - என்ற பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

 • பின்னர் முகப்புப்பக்கத்தில் 'Farmers corner' விருப்பத்தைத் தேடுங்கள்

 • இப்போது புதிய பட்டியலை சரிபார்க்க விரும்பினால், ‘‘Beneficiary List’’ மற்றும் உங்கள் நிலையை சரிபார்க்க விரும்பினால் ‘Beneficiary status’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

 • பின் ஆதார் எண், மொபைல் எண், மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

 • இந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு, ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்

நீங்கள் Beneficiary status -க்கு நேரடியாக செல்ல
Click here

நீங்கள் Beneficiary list -க்கு நேரடியாக செல்ல
Click here 

சுய பதிவு / சி.எஸ்.சி விவசாயியின் நிலையை சரிபார்க்க
Click here 

பி.எம் கிசான் தொடர்பான மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதியின் உதவி வேளாண்துறை அலுவலகத்தை அணுகவும்.

மேலும் படிக்க...

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம்!!

தமிழக அரசின் மீன்கள் ஆப் மூலம் ரூ.1 கோடிக்கு மீன்கள் விற்பனை!!

ஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்!

PM - Kisan pradhan manthiri Kisan Samman Nidhi Yojana PM Kisan Samman Nidhi Yojana பிரதமர் கிசான் திட்டம் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா பி.எம் கிசான்
English Summary: Here the Details about who are not eligible for PM Kisan and Direct link to check Beneficiary status and Beneficiary List inside

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. கால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்!
 2. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
 3. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
 4. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
 5. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
 6. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
 7. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
 8. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
 9. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
 10. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.