1. விவசாய தகவல்கள்

நிலத்தின் நுண்ணூட்டப் பற்றாக்குறையைப் போக்கும் பல பயிர் சாகுபடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cultivation of many crops that will alleviate the micronutrient deficiency of the land!
Credit: Autogrow

ஒரே வகை உணவை தொடர்ந்து உட்கொள்வதால், அதன் சுவை எப்படி நமக்கு அலுத்துப்போகிறதோ, அதேபோலத் தொடர்ந்து ஒரே வகைப் பயிர்களை சாகுபடி செய்து வரும்போது நிலத்தில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக ஒரு தழை எருச்செடியை வளர்த்து நிலத்தில் மடக்குவது, பல ஆண்டுகளுக்கு முன்பு நமது விவசாயிகளின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

தக்கைப்பூண்டு, சணப்பு, நரிப்பயிறு, கொளுஞ்சி போன்ற செடிகளை இடத்திற்கும், மண்ணுக்கும் ஏற்று நிலத்தில் பயிர் செய்து மடக்குவது ஆகியவைப் பழங்காலத்தில் இருந்து வழக்கத்தில் இருக்கும் பழக்கம். ஆனால், இங்கு பலவிதமான பயிர்களை வளர்த்து நிலத்தில் மடக்கி உழுகிறோம்.

நான்கு தானியங்கள் (Four grains)

நான்கு பயறுவகைச் செடிகள், நான்கு எண்ணெய் வித்துகள், நான்கு மணப்பொருட்கள், நான்கு உரச்செடிகள் என 20 வகைப் பயிர்களைக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும்.
சாகுபடி செய்து 50 நாட்கள் கடந்த பிறகு பாதி செடிகள் பூ பிடித்தல் ஆரம்பிக்கும் போது மடக்கி உழுதல் வேண்டும்.

சிறுதானியங்கள் (Cereals)

உதாரணமாக, சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை ஆகியவற்றுள் ஏதாவது நான்கு தானியங்களை தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம்.

இதைப் போலவே பாசிப்பயறு, உளுந்து தட்டைப்பயறு, கொள்ளு என நான்கு பயறுவகைப் பயிர்கள், நிலக்கடலை ஆமணக்கு, எள், சூரியகாந்தி, சோயா, மொச்சை என எண்ணெய்வித்துப் பயிர்களில் நான்கு, சமையல் அறையில் உள்ள மணப்பொருட்களில் கடுகு, சோம்பு, வெந்தயம், மல்லி) இந்த இந்த நான்கு பொருட்கள்தான் முளைக்கக்கூடியவை.

மண்ணின் தரம் உயரும் (Soil quality will rise)

இத்துடன் கொளுஞ்சி, அவுரி சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயிறு, அகத்தி, செம்பை, சித்தகத்தி இப்படி ஏதாவது நான்கு பயிர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்படி செய்வதால் மண்ணின் தரம் உயர்ந்து மகசூலும் அதிகரிப்பது என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள்.

மேலும் படிக்க...

அடங்காத வெள்ளை ஈக்கள்- பாதுகாக்க உதவும் உயிரியல் கட்டுப்பாடு!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?

English Summary: Cultivation of many crops that will alleviate the micronutrient deficiency of the land! Published on: 18 March 2021, 11:54 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.