1. தோட்டக்கலை

தமிழக அரசு அறிவிப்பு: பழப்பயிர்களுக்கு ரூ.1,12,000 வரை மானியம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil Nadu: Government Schemes to Increase Cultivation of Horticulture Crops

தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதிசெய்வதிலும் அதிகளவு பங்குவகிக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

நடப்பு ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள்

காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட பலவகையான தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம், உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், சுவை தாளித பயிர் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.

தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியீடு

தோட்டக்கலை மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம், 2022-23 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட இனங்களை செயல்படுத்துவதற்கு ரூ.170.79 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு செயல்திட்ட அறிக்கையினை தயாரித்து, அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அரசாணை வேளாண் உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் நோக்கம்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை பின்பற்றி, தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, தமிழக மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தோட்டக்கலை பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எவ்வளவு மானியம்?

இத்திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெற்று, சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40% மானியம் வழங்குகிறது. பயிர் வாரியான விபரம் பின்வருமாறு.

காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்: கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.50,000 செலவாகும். இதில், ரூ.20,000/- மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுகளும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

பழப்பயிர்கள் சாகுபடிக்கு மானியம்:

அடர் நடவு முறையில் மா சாகுபடியினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.9800/- மானியத்தில் ஒட்டு மாஞ்செடிகளும், கொய்யா சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.17,600/- மானியத்தில் கொய்யா பதியன்குளும், எக்டருக்கு ரூ.37,500 மானியத்தில் திசு வாழைக்கன்றுகளும், இடுபொருட்களும், பப்பாளி சாகுபடியை அதிகரிக்க, எக்டருக்கு ரூ.23,100/- மானியத்தில் பப்பாளிக் கன்றுகளும், இடுபொருட்களும், எலுமிச்சை சாகுபடிக்கு ரூ.13,200/- மானியத்தில் எலுமிச்சைக் கன்றுகளும், இடுபொருட்களும், அத்தி நாற்றுக்களும், இடுபொருட்களும், வெண்ணெய் பழம், நெல்லி, பலா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.14,400/- மானியத்தில் நடவுச் செடிகளும், இடுபொருட்களும் வழங்கப்படும். தரமான கன்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க: 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம், உங்கள் ராசிக்கு என்ன பலன்?

மேலும், டிராகன் பழ சாகுபடிக்கு பந்தல் அமைக்கவும் நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களுக்காகவும் எக்டருக்கு ரூ.96,000/-ம், அன்னாசி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.26,300/-ம், ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு எக்டருக்கு ரூ.1,12,000/-ம், நடவுக்குப் பின், கள ஆய்வு மேற்கொண்டு, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும், பழப் பயிர்களை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு நான்கு எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கான தகுதிகள்

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை http://horticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி 25,680 எக்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புடன், கூடுதல் வருமானமும் ஈட்டுவதற்காக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, இத்திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க:

70% மானியம்: கால்நடை காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு!

100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் வழங்கல்!

English Summary: Tamil Nadu: Government Schemes to Increase Cultivation of Horticulture Crops Published on: 02 November 2022, 12:01 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.