1. செய்திகள்

10, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு- மே மாதத்துக்கு தள்ளிப்போகிறது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தமிழகத்தில் 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாத் தாக்கம் (Corona impact)

கடந்த 2019ம் ஆண்டு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா முதல் அலை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தைக் கடுமையாகத் தாக்கியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. அதேநேரத்தில்
பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.


பள்ளிகள் மூடல் (Closing of schools)

இதன் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேல் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

கொரோனா 2-அலை குறைந்ததையடுத்துப், பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
இதன்படி9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

பாடங்களை முடிக்க வில்லை

தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கால அவகாசம் இல்லை (No time limit)

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.

எனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக 2 மாதங்கள் தள்ளிவைத்து பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளிக் கல்வித்துறை (School Education)

அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க...

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- பிரதமர் மோடி அறிவிப்பு!

பட்டுப்புழு வளர்க்க விருப்பமா?கருவிகள் வாங்க ரூ.52,500 வரை மானியம்!

English Summary: 10, Plus-1, Plus-2 General Exam- Postponed to May Published on: 19 November 2021, 12:16 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.