1. செய்திகள்

200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெற்களஞ்சியம்- வரலாறு தெரியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
200 yrs old paddy field

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நெற்களஞ்சியம் அழியும் நிலையில் உள்ளது, இது போன்ற நெற்களஞ்சியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேறு எங்கு உள்ளது? இது எதற்காக பயன்பட்டது? என்ற வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து பாம்பன் செல்லும் வழியில் இடது பக்கமாக அமைந்துள்ளது இந்த மன்னர் காலத்து நெற்களஞ்சியம்.

நெற்களஞ்சியம் வரலாறு:

நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக சேதுபதி மன்னர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல சத்திரங்கள் கட்டியுள்ளனர். இந்த சத்திரங்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில் ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர் சேதுபதி மன்னர்கள். இந்த நெற்களஞ்சியத்தை இரையாயிரம் கொண்டான் எனவும் அழைக்கின்றனர்.

ராமநாதபுரத்தில் இருந்த சிறியவகை நெற்களஞ்சியங்கள் தற்போது அழிந்து விட்டன. 200 ஆண்டுகளாக மண்டபம் தோணித்துறை பகுதியில் இருக்கும் இந்த நெற்களஞ்சியமும் அழிவின் விளிம்பில் தான் உள்ளது.

தானிய சேமிப்பு கிடங்கு:

மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் விவசாயம் இல்லாததால் சேதுநாட்டின் மற்ற பிற பகுதிகளில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டு இங்கு சேமித்து வைக்கப்பட்டது. இந்த சேமிப்பு கிடங்கு 15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் கொண்டுள்ளது. கீழ் பகுதி அகன்றும் மேலே குறுகியும் காணப்படுகிறது. இதனை சுற்றி கட்டப்பட்டிருக்கும் சுவரானது சுமார் 3 அடி அகலத்தில் உள்ளது. மேலும் மழை மற்றும் கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவத்தில் கட்டப்பட்டுள்ளது‌.

கூம்பு வடிவில் இருக்கும் இதன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதன் நடுப்பகுதியில் ஒரு சுவர் கட்டப்பட்டு இரு பகுதியாக பிரித்து கட்டியுள்ளனர். இதன் உள்ளே செல்ல வடக்கு பகுதியில் 3 அடி உயரமும் 2 அடி உயரத்தில் படி அமைத்து ஏறிச் செல்லும் வகையில் ஒரு வாசல் உள்ளது.

மேலும் படிக்க

பயணிகளுக்கு செப்டம்பர் 25 வரை விமானத்தில் இலவச பயணம்-ஏன்?

English Summary: 200 years old paddy field- Do you know history? Published on: 20 September 2022, 06:37 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.