1. செய்திகள்

ஏப்ரல் 5ஆம் தேதி நெல்லையில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்

Deiva Bindhiya
Deiva Bindhiya
ஏப்ரல் 5ஆம் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தகவல்
5th April is a local holiday for Nellai District - District Collector Information

பங்குனி உத்திர திருநாள்‌ (பங்குனி 22) 05.04.2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம்‌ முழுவதும்‌ அனைத்து பள்ளி, கல்லூரிகளில்‌ நடைபெற்று வரும்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ மற்றும்‌ முக்கியத்‌ தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்‌ அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்‌ நிறுவனங்களுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை (Local Holiday) நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ அரசு பொதுத்‌ தேர்வுகள்‌ ஏதுமிருப்பின்‌ பொதுத்‌ தேர்வு எழுதும்‌ பள்ளி மாணவர்கள்‌, பொதுத்‌ தேர்வு நடைபெறும்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ பொதுத்‌ தேர்வு தொடர்பாக பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு, இந்த உள்ளூர்‌ விடுமுறையானது பொருந்தாது எனவும்‌, மேற்படி 05.04.2023 உள்ளூர்‌ விடுமுறை நாளன்று நடத்தப்படும்‌ அரசு பொதுத்‌ தேர்வுகள்‌ அனைத்தும்‌ எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி உள்ளூர்‌ விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம்‌ 1881 (Under Negotiable Instrument &07-1881)-ன்‌ கீழ்‌ அறிவிக்கப்படவில்லை என்பதால்‌ வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ அனைத்து சார்நிலைக்‌ கருவூலங்களும்‌ குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள்‌ (Government Securities) தொடர்பாக அவசரப்‌ பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர்‌ விடுமுறையை ஈடு செய்யும்‌ வகையில்‌ 06.05.2023 முதலாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அச்சமயம்‌ கோடை விடுமுறையில்‌ உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலைநாள்‌ பெருந்தாது.

மேலும் படிக்க: 

பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உரிமைத்தொகையின் முழுவிவரம்

மீண்டும் ஒரு முறை, பங்குனி உத்திர திருநாள் 05 ஏப்ரல் 2023 புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இவை போதுத்தேர்வு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

இச்செய்தியை வெளியிடுவோர்: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, திருநெல்வேலி.

மேலும் படிக்க:

பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி

English Summary: 5th April is a local holiday for Nellai District - District Collector Information Published on: 21 March 2023, 05:29 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.