1. செய்திகள்

75 வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

R. Balakrishnan
R. Balakrishnan
75th Independence day

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், இன்னும் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்பேன் என்றும் கூறினார். சுதந்திரத்திற்கு தலைவர்கள் பாடுபட்ட கடந்த கால வரலாற்றை நான் எண்ணி பார்க்கிறேன். விடுதலை போராட்டத்திற்கு எதிராக முதன் முதலாக தமிழக மன்னர்கள் தான் குரல் கொடுத்தனர்.

சுதந்திர தினம் (Independence day)

மாநிலம் முழுவதும் முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமை பெற்று தந்த மறைந்த முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்கிறேன். சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தியாகிகள், அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். சுதந்திரத்திற்கு பாடுபட்டட தமிழகத்தை சேர்ந்த பாரதியார், சுப்பிரமணி சிவா, திருவிக, சிவகங்கை பனையூரை சேர்ந்த கான்சாகிப், வரியை தர மாட்டேன் என்ற கட்டப்பொம்மன், எட்டப்பர்களை பார்த்து சிரித்தவர் அவர். மாவீரன் சுந்தரலிங்கம், வடிவு, வீரநாச்சியார், குயிலி, சின்னமருது, பெரியமருது, தீரன்சின்னமலை, அழகுமுத்துக்கோனின் வீரம், சிங்காரவேலன், பகத்சிங், தோழர் ஜீவா, கர்ம வீரர் காமராஜர், ரெட்டை மேடை சீனிவாசன், காயிதே மில்லத் முத்துராமலிங்கம், திருப்பூர் குமரன், ஆகியோரை வணங்குகிறேன்.

ஓய்வூதியம் (Pension)

சுதந்திர நாளில் சுதந்திர போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கட்டபொம்மன், மருதுபாண்டி, விஜய ரகுநாத சேதுபதி வழித்தோன்றல் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 % ஆக அதிகரிக்கப்படும். இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவர்.

விருதுகள் (Awards)

தொடர்ந்து நடந்து விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர். ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் விருது, பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆய்வு நிறுவன இயக்குனர் இஞ்ஞாசி முத்துக்கு அப்துல் கலாம் விருது, எழிலரசிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, மாற்று திறனாளி நலனுக்கு உழைத்த டாக்டர் ஜெய்கணேஷ் மூர்த்தி, சமூக சேவகர் முனைவர் பங்கஜம், பிரியா உள்ளிட்டோருக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் முதல்வர் ஸ்டாலின் , காந்தி சிலையை திறந்து வைத்தார்.

மேலும் படிக்க

வீட்டில் தேசியக்கொடி ஏற்றுங்கள்: மத்திய அரசின் சான்றிதழைப் பெறுங்கள்!

75 வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

English Summary: 75th Independence Day: Chief Minister Stalin hoisted the flag at Chennai Fort! Published on: 15 August 2022, 11:09 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.