1. செய்திகள்

9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்- தமிழக முதல்வர் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி (All Pass) பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு (Corona Infection)


உலக நாடுகளை அச்சுறுத்தியதுடன், உயிர்கள் அனைத்தையும் ஒருவித அச்சத்துடனேயேக் கடக்க வைத்தது கொரோனா. இந்த தொற்று நோய் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

ஆன்லைன் வகுப்புகள் (Online Class)

தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பள்ளிகள் திறப்பு (Schools Opened)

அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின.

பாடத்திட்டங்கள் குறைப்பு  (Curriculum reduction)

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வுக்கு தயாராகுவதற்கு கால அவகாசம் இருக்குமா? என்பதெல்லாம் மாணவ-மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தன.

அதிகாரிகள் ஆலோசனை (Discussion)

மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்களும் அசிரியர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர்.10,11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

முதல்வர் அறிவிப்பு (CM Announceed)

இந்த நிலையில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் வயது (Retirement age)

இதேபோல் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுவதாக சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

பிஎம் கிசான் திட்டம் 2 ஆண்டுகள் நிறைவு! - விவசாயிகளின் உறுதிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

விவசாயத்தில் கவனம் செலுத்தும் தமிழக அரசு! - இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு!!

TNPSC Recruitment 2021 : வேளாண், தோட்டக்கலை அலுவலா்கள் பணியிடங்களுக்குத் தோ்வு: சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு!!

 

English Summary: 9th, 10th, 11th class school students all pass - Tamil Nadu Chief Minister's announcement! Published on: 25 February 2021, 01:20 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.