1. செய்திகள்

தவறான சிகிச்சையால் கருகிப்போன கனவு- காலமான கால்பந்து வீராங்கனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
A dream that was burnt due to wrong treatment - the deceased football player!

ரத்த உறவுகளின் மரணம் நம்மைக் கதறவிட்டுவிட்டுச் செல்லும் . ஆனால், சமூகத்தைக் கதறச் செய்யும் மரணங்களையும் சில வேளைகளில், தடுக்க இயலாமல் வேடிக்கை பார்க்கிறது இயற்கை. அப்படி பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களையும் கலங்கடித்திருக்கிறது சென்னையில் நிகழ்ந்த கால்பந்து வீராங்கனையின் மரணம்.

ஆபரேஷனுக்கு பிறகு இறுக்கமாக கட்டு போட்டதால் ரத்த ஓட்டம் நின்றது. மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலி வாங்கி இருக்கிறது. சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.

கால்பந்து ராணி

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் 17வயது மகள் பிரியா. இவருக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்த பிரியா மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை.

மரணத்தை அளித்த தசைப்பிடிப்பு

மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் விளையாடி வரும் இவருக்கு, கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.

மேல் சிகிச்சை

ஆனால் வலி குறையாததால், 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது.

காலனுக்கு வெற்றி

தொடர் சிகிச்சையில் இந்த பிரியாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியாவின் மறைவு, அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

ரூ.10 லட்சம்

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, தமிழக மருத்துவம் மக்கள் நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையால் மரணம் நிகழ்ந்திருப்பதாகவும், இதுகுறித்து துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

English Summary: A dream that was burnt due to wrong treatment - the deceased football player! Published on: 16 November 2022, 10:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.