1. செய்திகள்

இதய பாதிப்புகளை எளிதில் தீர்க்கும் பழம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Dragon Fruit

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஆரோக்கியமான உணவுகளையும் தாண்டி, பழங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி நாம் பழங்களை உட்கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும். அவ்வகையில், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் டிராகன் பழத்தைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள்

டிராகன் பழமானது கிவி மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களின் சுவையை கொண்ட போதிலும், இந்த சிறிய பழம் பல்வேறு ஆபத்தான நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. வைட்டமின் சி, கரோட்டின், நார்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், கொழுப்பு அமிலங்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் டிராகன் பழத்தில் நிறைந்துள்ளது. மேலும் இப்பழத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன.

டிராகன் பழத்தின் நன்மைகள்

டிராகன் பழம் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி புரிகிறது.

இப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வேலையைச் செய்கின்றன.

டிராகன் பழத்தில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற வியாதிகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

பெரும்பாலான இதய பாதிப்புகளுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் தான் மிக முக்கிய காரணம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், ஃபைபர் செரிமான அமைப்பிற்கு நன்மை அளிக்கும்.

டிராகன் பழத்தில் நல்ல அளவில் தண்ணீர் இருப்பதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நீரிழப்பு காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

டிராகன் பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் அஜீரணம் ஏற்படாது

மேலும் படிக்க:

தென்காசி சங்கரநாராயணர் கோவில் சிறப்புகள்

தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே இலக்கு

English Summary: A fruit that easily solves heart problems! Published on: 17 November 2022, 05:24 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.